[X] Close

உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, இங்கிலாந்துக்கு வாய்ப்பு ரிக்கி பான்டிங் கணிப்பு


ricky-ponting

  • kamadenu
  • Posted: 11 Feb, 2019 08:59 am
  • அ+ அ-

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தெரிவித்தார்.

இதுகுறித்து மெல்பர்னில் நேற்றுஅவர் கூறியதாவது: தற்போதுள்ள நிலவரப்படி இந்தியா, இங்கிலாந்து அணிகள் நல்ல பார்மில்உள்ளன. எனவே உலக கோப்பையை வெல்வதற்கு 2 அணிகளுக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

அதைப் போலவே ஆஸ்திரேலிய அணிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. நான் ஆஸ்திரேலிய அணிக்கு உதவி பயிற்சியாளராக இருப்பதால் இதை சொல்லவில்லை.

மிகச் சிறந்த ஆட்டக்காரர்களான ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் திரும்புவதால் அந்த அணிக்கும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இருவரும் மிகச் சிறந்த வீரர்கள். அவர்கள் மீதான தடை மார்ச் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலியா தீவிர முயற்சி செய்யும்.

இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்பநிலை, ஆஸ்திரேலிய நாட்டின் தட்பவெப்பநிலையுடன் ஒத்துப்போகிறது. எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் அங்கு சிறந்த முறையில் விளையாட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close