[X] Close

டாஸ்வென்றார் ரோஹித் சர்மா: இந்திய அணியில் ஒரு மாற்றம்: பிட்ச் ரிப்போர்ட் தெரியுமா


india-win-toss-opt-to-bowl-in-3rd-t20i-against-nz

  • போத்திராஜ்
  • Posted: 10 Feb, 2019 12:34 pm
  • அ+ அ-

 

ஹேமில்டன்,

ஹேமில்டனில் இன்று நடைபெறும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, 3போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருக்கின்றன.

3-வது மற்றும் கடைசி போட்டி இன்று ஹேமில்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. யஜுவேந்திர சாஹலுக்கு பதிலாக, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் மாற்றம் ஏதும் இல்லை

அதேபோல நியூசிலாந்து அணியில் பெர்குஷனுக்கு பதிலாக பிளேர் டிக்னர் அறிமுகமாகிறார்.

ஆடுகளத்தைப் பொருத்தவரை டி20-போட்டிகளுக்குச் சாதகமான முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் முதலில் பேட் செய்யும் அணி குறைந்தபட்சம் 200 ரன்கள் அடிக்க முடியும். அதே சேஸிங் செய்யும் அணியும் அதை எளிதாக சேஸிங் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்துகள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருப்பதால், வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தும் வகையில் பந்துவீசுவது சிறிது கடினம். அதேசமயம், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், சிக்ஸர் அடிப்பதும், பந்தைத் தூக்கி அடிப்பதும் சில நேரங்களில் துல்லியத்தன்மை தவறவும் வாய்ப்பு உண்டு. காற்றின் வேகம், பந்துவீச்சாளர்களுக்கும் பாதகமாக இருக்கும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close