[X] Close

சீன நிறுவனத்துடன் ரூ.50 கோடிக்கு பி.வி.சிந்து ஒப்பந்தம்


pv-sindhu

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 10:46 am
  • அ+ அ-

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவை சீனாவைச் சேர்ந்த லிங் நிங்நிறுவனம் ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளை கொண்டது.

கடந்த மாதம் இந்திய பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை இதே நிறுவனம் ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சிந்துவையும் லி நிங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

லி நிங் நிறுவனத்தின் இந்திய பங்குதாரரான சன்லைட் விளையாட்டு நிறுவனத்தின் இயக்குநர் மகேந்தர் கபூர் கூறுகையில், “உலக பாட்மிண்டன் அரங்கில் மேற்கொள்ளப்பட்ட பெரிய ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்பான்சர்ஷிப் மூலமாக சிந்துவுக்கு ரூ.40 கோடி கிடைக்கும். அதேவேளையில் ரூ.10 கோடிமதிப்பில் விளையாட்டு உபகரணங்களையும் சிந்து பெறுவார்.

சிந்துவின் ஒப்பந்தமானது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புமா நிறுவனத்துடன் செய்து கொண்ட வருடாந்திர ஒப்பந்தத்துக்கு நெருக்கமானது. எங்களது நோக்கமே சிந்துவும், ஸ்ரீகாந்தும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதை பார்க்க வேண்டும் என்பதுதான். எங்களால் முடிந்ததை செய்வோம். எந்த ஒரு நாட்டில் இருந்தும் சிறந்த பயிற்சியாளர்களை வரவழைத்து, பயிற்சிக்கான உதவிகளை வழங்குவோம்” என்றார்.

விராட் கோலியை கடந்த 2017-ம்ஆண்டு புமா நிறுவனம் ரூ.100கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இது 8 வருடகால ஒப்பந்தம். இதன் வாயிலாக விராட் கோலிக்கு வருடத்துக்கு ரூ.12.50கோடி வருமானம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல்இந்திய வீராங்கனை என்ற சாதனையை கடந்த 2016-ம் ஆண்டு நிகழ்த்திய சிந்து, அதன் பின்னர் பாட்மிண்டன் உலகில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். உலக அளவில் அதிகம் வருமானம் ஈட்டும் வீராங்கனைகளின் பட்டியலில் கடந்த ஆண்டு சிந்து 7-வதுஇடம் பிடித்திருந்ததாக போர்ப்ஸ்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

லி நிங் நிறுவனத்துடன் பி.வி.சிந்து ஒப்பந்தம் செய்துகொள்வது இது 2-வது முறையாகும். கடந்த 2014-15ம் ஆண்டில்இந்த நிறுவனம் ரூ.1.25 கோடிக்குசிந்துவை ஒப்பந்தம் செய்திருந்தது. இதன் பின்னர் யோனக்ஸ் நிறுவனம் ரூ.3.50 கோடிக்கு சிந்துவுடன் 3 ஆண்டுகால ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில்தான் லிநிங் நிறுவனம் அதிக தொகைக்கு சிந்துவை 2-வது முறையாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close