[X] Close

திறமையான வீரர்கள் உருவாகவில்லை: இலங்கை முன்னாள் வீரர் முரளிதரன் கவலை


muthaiah-muralidharan

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 09:38 am
  • அ+ அ-

கடந்த 4 ஆண்டுகளில் இலங்கை யில் திறமையான வீரர்கள் உருவாக வில்லை என்று அந்நாட்டு கிரிக் கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: நான் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் தொடர் பில் இல்லை. இது எனக்கு வருத் தத்தை அளித்தது. உலகக் கோப்பை போட்டியில் மூன்று முறை இறுதிச் சுற்றுக்கு சென்ற இலங்கை அணி தற்போது மோசமான நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.

நாங்கள் கிரிக்கெட் விளையா டிய காலங்களில் பணம் பெரிய விஷயமாக இல்லை. விக்கெட், ரன் எடுப்பதில் கவனம் செலுத்தி னோம். ஆனால் இப்போதைய நிலைமை வேறாக உள்ளது. பணத் துக்கு மதிப்பு கொடுத்தால் கிரிக் கெட்டின் தரம் குறைந்துவிடும்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த 3, 4 ஆண்டுகளில் திறமை யான வீரர்களை உருவாக்க வில்லை. திறமையான வீரர்கள் கிடைத்தாலும், அவர்கள் எப்படி விளையாடவேண்டும் என்று அறிந் திருக்கவில்லை. இலங்கை அணி பயிற்சியாளராகவோ, ஆலோசக ராகவோ இருக்க விருப்பமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

15 ஓவர் கிரிக்கெட்

15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் 15 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த பெரிட் விளையாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பெரிட் கிரிக்கெட் பாஷ் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொட ருக்கான வீரர்கள் தேர்வு சென்னை உட்பட நாட்டில் உள்ள 25 நகரங் களில் நடத்தப்பட உள்ளது. மொத் தம் 16 அணிகள் தேர்வு செய்யப் பட்டு போட்டிகள் நடத்தப்பட உள் ளன. இந்தத் தொடரில் சாம்பி யன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.31 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.21 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுதொடர் பான அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முத்தையா முரளிதரன் கூறும்போது, “இந்த கிரிக்கெட் தொடரை ஊக்கப்படுத் துவதே எனது பணி. வீரர்கள் தேர்வு 30 முதல் 40 வீரர்கள் வரை சுருக்கப்பட்ட பின்னர் நடைபெறும் தேர்வில் பங்கேற்பேன்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close