[X] Close

ரஞ்சி கோப்பையில் விதர்பா சாம்பியன்


vidarbha-champion-in-the-ranji-trophy

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 09:57 am
  • அ+ அ-

ரஞ்சி கோப்பை தொடரில் விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ரஞ்சி கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் சவுராஸ்டிரா - விதர்பா அணிகள் நாக்பூரில் விளையாடி வந்தன. இதன் முதல் இன்னிங்ஸில் விதர்பா 312 ரன்களும், சவுராஸ்டிரா 307 ரன்களும் சேர்த்தன. 5 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆதித்யா சர்வாதே 49, மோகித் கலே 38 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 206 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 28 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது.

ஹர்விக் தேசாய் 8, ஸ்நெல் படேல் 12, சேதேஷ்வர் புஜாரா 0,அர்பித் வசவதா 5, ஷெல்டன் ஜேக்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். விஷ்வராஜ் ஜடேஜா 23,மக்வானா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 148 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 58.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

விஷ்வராஜ் ஜடேஜா 52, மக்வானா 14, மங்கட் 2, தர்மேந்திரசின் ஜடேஜா 17, ஜெயதேவ் உனத்கட் 7 ரன்களில் வெளியேறினர். சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வாதே 6 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸிலும் அவர், 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். 78 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றிபெற்ற விதர்பா அணிசாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. கடந்த சீசனிலும் அந்த அணியே கோப்பையை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் பட்டத்தை தக்கவைத்த 6-வதுஅணி என்ற பெருமையை பெற்றதுவிதர்பா அணி. அதேவேளையில் முதன்முறையாக பட்டம் வெல்லும் சவுராஷ்டிரா அணியின் கனவு தகர்ந்துள்ளது. அந்த அணி 2012-13 மற்றும் 2015-16 சீசனில் மும்பை அணியிடம் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது. தற்போது சவுராஷ்டிரா அணியிடம் வீழ்ந்துள்ளது. நட்சத்திர வீரரான சேதேஷ்வர் புஜாரா சோபிக்காதது அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் சேர்த்த புஜாரா, 2-வது இன்னிங்ஸில் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஆட்டமிழந்திருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close