[X] Close
 

என் மகன் எப்படி வரவேண்டும் தெரியுமா-ஷாருக்கானின் விருப்பம் இதுதான்


shah-rukh-son-will-be-a-hockey-player

  • போத்திராஜ்
  • Posted: 09 Apr, 2018 16:33 pm
  • அ+ அ-

என் இளைய மகனை இந்தியாவுக்காக ஹாக்கி விளையாட வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை என்று இந்தி நடிகரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின்  உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஐபில் போட்டியில் கொல்கத்தாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வென்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஆண்டு கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியின் ஆட்டத்தைக் காண ஷாருக்கான், அவரின் மகள் சுஹானா, 5வயது மகன் ஆப்ராம் ஆகியோர் நேற்று வந்திருந்தனர். போட்டியை கண்டு அனைவரும் ரசித்தனர். 

போட்டி முடிந்தபின், நிருபர்களிடம் ஷாருக்கான் கூறுகையில், 'என்னுடைய இளைய மகன், 5வயதான ஆப்ராமை நான் ஹாக்கி விளையாட்டு வீரராக உருவாக்க விரும்புகிறேன். அவர்  இந்த நாட்டுக்காக அவர் விளையாட வேண்டும் என்பதுதான் ஆசை.

இன்னும் ஆப்ராம் கிரிக்கெட் விளையாடக் கூட முயற்சிக்கவில்லை. தற்போது கால்பந்துமட்டுமே விளையாடி வருகிறார். அவர் வளர்ந்துவரும் போது, ஹாக்கி பயிற்சி அளித்து நாட்டுக்கான அணியில் பங்கேற்று விளையாட வேண்டும்.

கொல்கத்தா, மேற்குவங்க மக்களின் கடமை கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், அவரின் அணியை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் எந்தவிதமான சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில் சக் தே, இந்தியா எனும் இந்தி திரைப்படத்தில் மகளிர் அணிக்கு ஹாக்கி பயிற்சியாளராக ஷாருக்கான் நடத்திருந்தார். பயிற்சியாளர் கபீர்கானாக நடித்திருக்கும் ஷாருக்கான் மகளிர் அணியை உலகக்கோப்பயை வெல்ல வைக்க அளிக்கும் பயிற்சியும், கோப்பையை வெல்வதும் கதையாகும். இந்த திரைப்படம் பாலிவுட்டில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close