ஆண்டர்சனைக் கடந்து ரபாடாவைப் பிடிக்கும் தூரத்தில் பாட் கமின்ஸ்; ஹோல்டர் புதிய பாய்ச்சல்: ஐசிசி தரவரிசை

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைக் கடந்து 2ம் இடம் சென்றுள்ளார். மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6ம் இடத்துக்குத் தாவியுள்ளார்.
பாட் கமின்ஸ், நம்பர் 1 பவுலர் ரபாடாவைக் காட்டிலும் தற்போது 4 புள்ளிகள்தான் குறைவாக உள்ளார். விரைவில் ரபாடாவையும் சாய்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக கான்பெராவில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க் 10 இடங்கள் முன்னேறி 15வது இடம் பிடித்துள்ளார்.
மே.இ.தீவுகளின் கிமார் ரோச் 12 ம் இடத்துக்கும் ஷனன் கேப்ரியல் 11ம் இடத்திலும் உள்ளனர்.
டாப் 5 பவுலர்கள்:
ரபாடா (882 புள்ளிகள்)
பாட் கமின்ஸ் (878 புள்ளிகள்)
ஆண்டர்சன் (860 புள்ளிகள்)
வெர்னன் பிலாண்டர் (809 புள்ளிகள்)
ரவீந்திர ஜடேஜா (794 புள்ளிகள்)