[X] Close

தோனி இருக்கிறார்: பேட்ஸ்மேன்களுக்கு ஐசிசி எச்சரிக்கை


never-leave-your-crease-with-ms-dhoni-behind-the-stumps-icc-s-valuable-advice

  • போத்திராஜ்
  • Posted: 05 Feb, 2019 11:42 am
  • அ+ அ-

 

துபாய்,

தோனி விக்கெட் கீப்பிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஐசிசி எச்சரிக்கை செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வெலிங்டனில் நடந்த 5-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் 44 ரன்கள் சேர்த்திருந்தபோது தோனியின் சமயோஜிதமான செயலால் ஆட்டமிழந்தார்.

அதாவது, 31 ஓவர்களில் 135/6 என்று நியூஸிலாந்து திணறிய நிலையில் சாண்ட்னர், நீஷம் இணைந்து ஸ்கோரை 176 ரன்களுக்கு 6 ஓவர்களில் கொண்டு சென்றனர்.

இதில் ஜேம்ஸ் நீஷம் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 44 ரன்கள் எடுத்து அதிரடி முறையில் ஆடி வந்தார். 37வது ஓவரின் 2வது பந்தை கேதார் ஜாதவ் வீச நீஷம் நன்றாகக் காலை நீட்டி ஸ்வீப் ஆட முயன்றார். பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட்டு பந்து பின்னால் தோனியிடம் சென்றது

இதனையடுத்து ஜாதவ் எல்.பி.முறையீடு எழுப்பினர். ஆனால் அது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்பதால் எல்.பி.கிடையாது. பந்து பின்னால் தோனியிடம் சென்றதை அறியாத ஜேம்ஸ் நீஷம் கிரீசுக்கு வெளியே இருந்தார். தோனி அமைதியாக 2 அடி வந்தார், எல்.பி. அப்பீல் செய்தார்.

ஆனாலும் நீஷம் வெளியில் இருந்த வாய்ப்பை மிகச்சாமர்த்தியமாகக் கையாண்ட தோனி பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ மூலம் ஸ்டம்பை நோக்கி எறிந்தார், பந்து ஸ்டம்பில் பட நீஷம் ரன் அவுட் ஆனார்.

எப்போதும் விக்கெட்டை பெரிய அளவில் கொண்டாடாத தோனி இந்த விக்கெட்டை பெரிதாகக் கொண்டாடினார். தோனி இம்மாதிரி ஒரு விக்கெட்டை கொண்டாடி இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த ரன்அவுட்டையும், தோனியின் சமயோஜித செயலையும் பாராட்டி, ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், " பேட்ஸ்மேன்களே ஸ்டெம்புகளுக்கு பின்னால் தோனி கீப்பிங் செய்துவருகிறார் என அறிந்தால், ஒருபோதும் கிரீசை விட்டு வெளியே சென்றுவிடாதீர்கள். விக்கெட்டை இழந்துவிடுவீர்கள் " என்று கிண்டலாக எச்சரிக்கை செய்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close