[X] Close

எங்களைப் பரிசோதித்துக் கொள்ளவே இந்தப் பிட்சில் முதலில் பேட் செய்தோம்: ரோஹித் சர்மா விளக்கம்


rohit-sharma-cricket-india-newzealand-5th-odi-shami-pandya

  • முத்துக்குமார்
  • Posted: 03 Feb, 2019 17:50 pm
  • அ+ அ-

வெலிங்டன் போட்டியில் இந்திய அணி அபாரமான ஆல்ரவுண்ட் திறமையில் நியூஸி.யை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தொடரை 4-1 என்று கைப்பற்றினாலும் ரோஹித் சர்மா ஏன் இந்தப் பிட்சில் முதலில் பேட் செய்தார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும்.

ஏனெனில் பிட்சில் தொடக்கத்தில் ஸ்விங் இருக்கும், பிறகு கொஞ்சம் எளிதாகும், பிற்பகுதியில் பனிப்பொழிவில் பந்து வழுக்கும் என்றும் பிட்ச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது, அப்படியிருக்கும் போது டாஸ் வென்ற ரோஹித் ஏன் முதலில் பேட் செய்ய வேண்டும்? இலக்கை துரத்தித்தானேயிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது, குறிப்பாக இந்திய அணி 18 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த போது அனைவரிடத்திலும் ஏற்பட்டது.

இந்த ஐயம், ராயுடு, விஜய் சங்கர், பாண்டியா, கேதார் ஜாதவ் பேட்டிங்கை நிலை நிறுத்தியபோதும் தொடர்ந்தது, எனவே 252 ரன்கள் இலக்கும் போதாது என்ற எண்ணம்தான் ஏற்பட்டிருக்கும், ஆனால் நியூஸிலாந்து அணி சீரான முறையில் விக்கெட்டுகளை இழந்ததில் தோல்வி கண்டது. 

இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

ஹாமில்டனில் பெரிய தோல்வி தழுவினோம், அதன் பிறகு மீண்டும் ஒன்று சேர வேண்டியதாயிற்று. 4 விக்கெட்டுகள் இழந்தபிறகு யாராவது ஒருவர் முனைப்புடன் ஆட வேண்டியிருந்தது.  ராயுடு விஜய் சங்கர் கூட்டணி ஆட்டத்தை நம் சார்பாகத் திருப்பியது.

பிட்ச் கடைசியில் பிளாட்டாக இருந்தது, ஒரு கட்டத்தில் விரட்டல் சுலபம் என்றே தோன்றியது. ஆனால் பந்து வீச்சு அபாரமாக அமைந்தது. பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது. தொடரை ஏற்கெனவே வெல்லாமல் இருந்திருந்தால் நான் இலக்கை விரட்டவே முடிவெடுத்திருப்பேன். ஆனால் இன்று எங்களைப் பரிசோதித்துக் கொள்வதற்காக முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தோம். 

நியூஸிலாந்துக்கு வந்து அவர்களை ஒருநாள் தொடரில் வீழ்த்துவது சாதாரண காரியமல்ல. 4-1 என்ற வெற்றி ஒருசாதனையே.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close