[X] Close

பீல்டிங்கிற்காக ஆட்ட நாயகன் விருது பெற்ற தெ.ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர்


david-miller

  • kamadenu
  • Posted: 03 Feb, 2019 10:51 am
  • அ+ அ-

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

கேப்டவுனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஹென்ட்ரிக்ஸ் 41 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 74, கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் 45 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினர்.

193 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்ச மாக கேப்டன் ஷோயிப் மாலிக் 49, ஹூசைன் தலத் 40, பாபர் அசாம் 38 ரன்கள் சேர்த்தனர். கிறிஸ் மோரிஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு டேவிட் மில்லரின் அற்புதமான பீல்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. 4 கேட்ச்கள் மற்றும் இரு ரன் அவுட்கள் செய்த அவர், ஆட்ட நாயகனாக தேர்வானார். இதன் மூலம் டி 20 ஆட்டத்தில் பீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர், பெற்றார்.

இதற்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1986-ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட் டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கஸ் லோகியும் ( 3 கேட்ச், 2 ரன் அவுட்), 1989-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸும் ( 3 கேட்ச்), 1993-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸும் (5 கேட்ச்கள்) சிறந்த பீல்டிங்குக்காக ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

கேப்டவுன் ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் டி 20 வடிவத்தில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் இலக்கை வெற்றி கரமாக துரத்திய பாகிஸ் தான் அணியின் ஆதிக்கத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது. 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close