[X] Close
 

6 பந்துகளையும் நானே ஆடுகிறேன்: இம்ரான் தாஹிரிடம் தெரிவித்த கேதார் ஜாதவ்


ipl-csk-jadhav

  • kamadenu
  • Posted: 08 Apr, 2018 11:47 am
  • அ+ அ-

தோல்வியின் பாதாளத்திலிருந்து டிவைன் பிராவோவின் அதிரடி மீட்பின் மூலம் முதல் வெற்றியை ஈட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு மேடையில் தன் கருத்தை வெளியிட்டார்.

டிவைன் பிராவோ தன் அதிரடி மூலம் வெற்றிக்கு அருகில் கொண்டு விட்டு அவுட் ஆகிச் செல்ல காயத்துடன் மீண்டும் இறங்கிய கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மானின் 3 பந்துகளில் ரன் எடுக்க முடியவில்லை. நெருக்கடி அதிகரிக்க அடுத்த பந்தை முஸ்தபிசுர் வீச ஒரு ‘தில்ஷன் ரக ஸ்கூப்’ அல்லது டிவில்லியர்ஸ் ரக சாதுரிய ஷாட்டில் பைன் லெக்கில் அபார சிக்ஸ் அடிக்க ஸ்கோர் சமன் ஆனது, பிறகு ஜாதவ் பவுண்டரி அடித்து சென்னை வெற்றியை உறுதி செய்தார். 

இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி, கேதார் ஜாதவ், பிராவோ கூறியதாவது:

தோனி: சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டி அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு போட்டியாகும். 2 ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறோம். மொத்தமாக பார்வையாளர்கள் அபாரம்.

பிராவோ பேட்டிங் அற்புதம், பொறுப்பை உணர்ந்து அவர் தன் மேல் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் பார்க்க நன்றாக இருந்தது. நாங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடியிருக்கலாம். இந்தப் போட்டியிலிருந்து நிறைய நம்பிக்கைகளை எடுத்துக் கொள்கிறேன். 

எங்களிடம் உள்ள வீரர்களின் கலவை அனைவரும் பந்தயக் குதிரைகள்தான் என்பதைக் காட்டுகிறது. காயமடையும் சாத்தியமுள்ள வீரர்கள் மீது ஒரு கண் வைத்துக் கொள்வது நலம். எதாக இருந்தாலும் எளிதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முக்கியம் என்று கருதுபவன் நான்.

பிராவோ: கிரேட் வின், இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். சிஎஸ்கே என் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளது, மைதானம் சிறியதுதான். என் திறமைகளைப் பயன்படுத்தினேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரோஹித் சர்மா: பிராவோவுக்கு முழு பாராட்டுதல்கள், 17வது ஓவர் வரை ஆட்டத்தில் இருந்தோம். யார்க்கர்கள் சரியாக விழவில்லை பனிப்பொழிவும் பிரச்சினை. 10-15 ரன்கள் குறைவாகப் பெற்றோம். 

கேதார் ஜாதவ்: மனத்தளவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் உடல் அளவில் அல்ல, காரணம் ஓரிரு வாரங்களுக்கு நான் ஆட முடியாது (இடது தொடை சதைப் பிடிப்பு), பிராவோ எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்தார். என்னால் ஓட முடியவில்லை, அதனால் கடைசி 6 பந்துகளையும் நானே சந்திக்கிறேன் என்று இம்ரான் தாஹிரிடம் கூறினேன். 6 பந்துகளில் 7 ரன்களுடன் பந்துகளும் ஒரே லெந்தில்தான் வந்தது. ஒரு பெரிய ஹிட் தேவைப்பட்டது. அது சிக்கியது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close