[X] Close
 

பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல்


ipl-2018-ms-dhoni-shakes-a-leg-on-csk-theme-song

  • இந்து குணசேகர்
  • Posted: 07 Apr, 2018 15:26 pm
  • அ+ அ-

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

மே 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீம் பாடலான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு  பெரிய விசில் அடிங்க என்ற ஹிட்டான பாடலை புதிய வடிவ காட்சிகளுடன் புதிய சீசனுக்கு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தோனி, ப்ராவோ, வாட்சன், முரளி விஜய் ஆகிய முக்கிய வீரர்கள் நடனமாடும் இந்த வீடியோவில் சென்னையின் கலாச்சாரத்தையும் பதிவு செய்துள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close