[X] Close

சர்பராஸ் அகமெட் செயலை ஏற்க முடியாது- அக்தர்; என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்- சர்பராஸ் பதில்


sarfraz-ahmed-shoaib-akthar-cricket-pakistan

  • முத்துக்குமார்
  • Posted: 30 Jan, 2019 20:32 pm
  • அ+ அ-

நிறவெறிக் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 போட்டிகளுக்குத் தடைவிதிக்கப்பட்ட சர்பராஸ் அகமெட் செய்த காரியம் ஏற்புடையதல்ல என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறியதற்கு அவர் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார் என்று பதிலளித்துள்ளார் சர்பராஸ் அகமெட்

ட்விட்டர் வீடியோவில் அக்தர் கூறியதாவது:

ஒரு பாகிஸ்தானியராக சர்பராஸ் அகமெட் கருத்தை  ஏற்று கொள்ள முடியவில்லை. அவர் அந்தத் தருணத்தின் சூட்டில்  அதனைச் செய்திருக்கலாம், அவர் இது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த சர்பராஸ் அகமெட், “நான் என் தவற்றை ஒப்புக் கொண்டு தண்டனையையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். நான் என் ஆட்டத்தையும் நடத்தையையும் இனி மேம்படுத்துவேன். என் ஆதரவாளர்களுக்கு நன்றி.  ஷோயப் அக்தர் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார். என்னை விமர்சிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close