[X] Close

உலகம் முழுதும் உள்ள பாகிஸ்தானியர்கள் சர்பராஸ் அகமெட் பேச்சை ஊதிப்பெருக்கி விட்டனர்: வாசிம் அக்ரம் ஆதரவு


sarfraz-ahmed-pakistan-racist-comment-wasim-akram

  • முத்துக்குமார்
  • Posted: 29 Jan, 2019 20:15 pm
  • அ+ அ-

நிறவெறி குற்றச்சாட்டில் சிக்கி 4 போட்டிகள் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெடை தடையைக் காரணம் காட்டி திரும்ப பாகிஸ்தானுக்கு அழைத்தது பெரும் தவறு என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சாடியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் பெலுக்வயோ என்ற வீரரை நோக்கி பாகிஸ்தான் கேப்டன் சமீப ஒருநாள் போட்டியில், “ஏய் கருப்புப் பயலே” என்று விளித்தது சிக்கலாகி ஐசிசி நிறவெறித்தடை விதிமுறையின் கீழ் 4 போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டார் சர்பராஸ். இதனையடுத்து அவரை பாக். கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் திரும்புமாறு கூறிவிட்டது.

“சர்பராஸ் அகமெடை திரும்ப அழைத்தது தவறான முடிவு. பிப்ரவரி 6ம் தேதி அவர் கடைசி டி20 போட்டியில் ஆடியிருக்கலாமே. 

சர்பராஸ் அவ்வாறு நிறவெறி வசைபாடியது தாறுதான், ஆனாலும் உலகம் முழுதும் உள்ள பாகிஸ்தானியர்கள் இதனை ஊதிப்பெருக்கி விவகாரமாக்கி விட்டனர் என்பதும் உண்மையே.

உலகக்கோப்பைக்கு முன்பு கேப்டனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நீண்ட கால கேப்டன் நமக்குத் தேவை, குறுகிய கால கேப்டன் அல்ல. ஷோயப் மாலிக் தற்போது அணியை வழிநடத்துகிறார், அவரும் நன்றாகவே பணியாற்றுகிறார், ஆனால் அவரும் உலகக்கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

நான் சர்பராஸ் அகமெடை ஆதரிக்கக் காரணம் அவர் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார், இனி அவர் முதிர்ச்சியுடன் நடந்து கொள்வார், அவர் அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் அணியை ஒரு அச்சமற்ற அணியாக வழிநடத்தி வருகிறார். அதனால் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து அகற்றுவது தவறு.

இவ்வாறு கூறினார் வாசிம் அக்ரம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close