[X] Close

2020 டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: சவாலான அணிகளுடன் கோலி படை


icc-t20-world-cup-2020-fixtures-revealed

இந்திய அணி

  • போத்திராஜ்
  • Posted: 29 Jan, 2019 10:49 am
  • அ+ அ-

 

துபாய்,

ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஆடவர், மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.

ஒரே ஆண்டில், ஒரே நாட்டில் ஆடவர், மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடப்பது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகும்.

ஆடவர் பிரிவு டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் 2020-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அக்டோபர் 18-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடைபெறுகின்றன அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை லீக் சுற்றுப்போட்டிகள் நடக்கின்றன. நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், 15-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.

ஆடவர் இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குரூப்-2வில் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணியோடு, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் இடம் பெறும் 2அணிகள் இடம் பெறுகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் களமாடுகிறது இந்திய அணி.

குரூப்-1ல் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தகுதிச்சுற்றில் இடம் பெறும் இரு அணிகள் ஆகியவை இடம் பெறுகின்றன.

தகுதிச்சுற்றுப்போட்டிகள் முடிந்த நிலையில் குரூப்ஸ்டேஜ் ஆட்டங்கள் 2020 அக்டோபர் 24-ம் தேதி தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது. நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத்தீவுகள் அணி அக்டோபர் 25-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

குருப்-1

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதல் அணி, பி பிரிவில் 2-ம் அணி

குரூப்-2

இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, தகுதிச்சுற்றில் பி பிரிவில் முதல் அணி, ஏ பிரிவில் 2-ம் அணி

இந்திய அணி மோதும் லீக் போட்டிகள் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.         2020-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பெர்தில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதுகிறது

2.         29-ம் தேதி தகுதிச்சுற்றில் ஏ பிரில் 2-ம் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இது மெல்போர்னில் நடக்கிறது.

3.         நவம்பர் 1-ம்தேதி மெல்போர்னில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி

4.         நவம்பர் 5-ம் தேதி அடிலெய்டில் நடக்கும் ஆட்டத்தில் பி பிரிவில் முதல் அணியுடன் இந்திய அணி மோதுகிறது

5.         நவம்பர் 8-ம் தேதி சிட்னியில் நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close