[X] Close

என் 19 வயதில் ஷுப்மான் கில் திறமையில் 10% கூட என்னிடம் இல்லை: விராட் கோலி புகழாரம்


virat-kohli-shubman-gill-india-wins-newzealand

  • முத்துக்குமார்
  • Posted: 28 Jan, 2019 16:55 pm
  • அ+ அ-

நியூஸிலாந்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்றதையடுத்து விராட் கோலி அணியின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டினார். அதோடு அணிக்குள் வரும் புதிய திறமைகளையும் விதந்தோதினார்.

 விராட் கோலி கூறியதாவது:

சில தனித்துவமான திறமை படைத்த வீரர்கள் வந்துள்ளனர், பிரித்வி ஷா தனக்குக் கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பற்றிக் கொண்டார்.  ஷுப்மன் கில் இன்னொரு உற்சாகமூட்டும் திறமையுடைய வீரர்.

நான் அவர் வலைப்பயிற்சியில் ஆடியதைப் பார்த்தேன், ஆச்சரியமாக இருந்தது, நாம் கூட 19 வயதில் இப்படி ஆடவில்லையே என்று நினைக்க வைத்தது. இத்தகைய தன்னம்பிக்கையைத்தான் அவர்கள் சுமந்திருக்கின்றனர், தர நிலை உயர உயர அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.  இத்தகைய திறமைகள் நேரடியாக அணிக்குள் வந்து உடனடியாக நிரூபிக்கவும் செய்கின்றனர். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் மகிழ்ச்சியை விடவும் நிறைவடைகிறோம். அவர்கள் வளர்ச்சியடைய வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குகிறோம்.

இந்த 3 போட்டிகளுமே துல்லிய ஆட்டமாக தொடர் வெற்றியில் முடிந்தது அபாரமானது.  ஓயாது சிறப்பான ஆட்டத்தை அணி வீரர்கள் வெளிப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.  

இந்தப் போட்டியுடன் எனக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் கடுமையான தொடர், பிறகு இங்கு போட்டிகள். இப்போது 3-0 என்று தொடரை வென்றுள்ளோம் அதனால் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக முடிகிறது. 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close