[X] Close

‘ரன் மெஷின்’ புஜாரா; மீண்டுமொரு வெற்றிகர விரட்டல்: கர்நாடகாவை வெளியேற்றி இறுதியில் சவுராஷ்ட்ரா


pujara-saurashtra-karnataka-ranji-trophy-2019-cricket

  • முத்துக்குமார்
  • Posted: 28 Jan, 2019 16:21 pm
  • அ+ அ-

ரஞ்சி ட்ராபி அரையிறுதிப் போட்டியில் ரன் மெஷின் செடேஷ்வர் புஜாரா 131 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 282 ரன்களை 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்ற ஜெய்தேவ் உனாட்கட் தலைமை சவுராஷ்டிரா அணி கர்நாடகாவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

பிப். 3-7-ல் ஜெய்பூரில் நடைபெறும் இறுதியில் விதர்பாவைச் சந்திக்கிறது சவுராஷ்ட்ரா, விதர்பா அணி கடந்த முறை சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.  புஜாரா 266 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் எடுக்க அவருடன் ஜாக்சன் 100 ரன்களை எடுத்தார், இருவரும் சேர்ந்து 3/23 என்ற தோல்விமுகத்திலிருந்து 214 ரன்கள் 4வது விக்கெட் வெற்றிக்கூட்டணி அமைத்தனர். 

சவுராஷ்ட்ரா அணி இதோடு இறுதிப் போட்டியில் விளையாடுவது 3வது தடவையாகும். 5ம் நாளான இன்று 55 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் 17.4 ஓவர்களில் ஆட்டம் முடிந்தது, ஜாக்சன் தன் 16வது சதத்தை எடுத்து முடித்தார். 

புஜாரா 32 ரன்களில் இருந்த போது கர்நாடகாவின் அயராத உழைப்பாளி பவுலர் வினய் குமார் பந்தில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது, ஆனால் கள நடுவர் நாட் அவுட் என்றார், அது கிளீன் எட்ஜ், தப்பினார் புஜாரா. அவரே பெவிலியன் சென்றிருக்க வேண்டும், ஆனால் இக்காலத்து வீரர்களிடம் அவ்வளவு பெரிய மனிதத் தன்மையை எதிர்பார்ப்பது விரயம்தான். வினய் குமாருக்கு ஆறுதல் விக்கெட் ஜாக்சன் ஆனார், ஆனால் அவர் அவுட் ஆகும் போது சவுராஷ்ட்ரா வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.  எட்ஜ் மட்டுமல்ல இன்னொரு முறையும் அவருக்கு அவுட் கொடுக்கவில்லை, நடுவர்களின் தரம் இந்த சீசனில் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. 

வினய் குமார், ரன் மெஷின் புஜாராவை இருமுறை தொடர்ச்சியாக பீட்டன் செய்தார். இன்னொரு முனையில் ரோனித் மோர் பிரமாதமாக வீசி ஷார்ட் பிட்ச் பந்து உத்தியைக் கடைபிடித்தார். லெக் திசையில் அருகில் நிற்க வைத்து ஷார்ட் பிட்ச் வீசியதில் சவுராஷ்ட்ரா வீரர் ஆர்பித் வசவாதா விக்கெட்டை இழந்தார். இந்த ரோனித் மோர் ஒரு ஆக்ரோஷ பவுலர், இவரது வேகப்பந்து வீச்சு விரைவில் இந்திய அளவில் பேசப்படும். வெற்றி ரன்களுக்கு முன்னதாக 3 பயங்கர பவுன்சர்களை வீசி தன் ஆக்ரோஷத்தைக் காட்டினார் ரோனித் மோர். 

குறிப்பாக சையத் காலித் என்ற நடுவருக்கு அணிகள் நிச்சயம் நல்ல மதிப்பெண் அளிக்காது, அதனால் அடுத்த சீசனுக்குள் அவர் ரஞ்சிப் போட்டிகளுக்கும் கீழ் நடக்கும் போட்டிகளுக்கு இறக்கப்படுவார். அவரது மோசமான நடுவர்பணியினால்தான் கர்நாடகாவின் வாய்ப்புகள் பறிபோனது. 

ஆஸ்திரேலியா தொடரிலிருந்து புஜாராவின் ஸ்கோர்கள் இதோ: 123, 71, 24, 4, 106, 0, 193, 11, 67 , 45, 131.  

சுருக்கமான ஸ்கோர்: கர்நாடகா 275 மற்றும் 239; சவுராஷ்ட்ரா 236 ஆல் அவுட், 282/5 (வெற்றி)

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close