[X] Close

குடியரசு தின பரிசு: குல்தீப், ரோஹித் அற்புதம்; இந்தியாவிடம் நியூசி. சரண்


republic-day-gift-india-crush-new-zealand-by-90-runs-to-take-2-0-lead

  • போத்திராஜ்
  • Posted: 26 Jan, 2019 15:52 pm
  • அ+ அ-

மவுண்ட்மவுங்கினி
குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹலின் மாயாஜால சுழற்பந்துவீச்சால் மவுண்ட் மவுங்கினியில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. 

ரோஹித் சர்மா, ஷிகர் தவண் அமைத்துக்கொடுத்த வலுவான அடித்தளம், கடைசி நேரத்தில் தோனி, கேதர்ஜாதவ் அடித்த அதிரடி ஆட்டம் ஆகியவை இந்திய அணி இமாலய ஸ்கோர் எட்ட உதவி செய்தது. மிகச்சிறிய ஆடுகளம், பேட்டிங்கிக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கூறப்பட்டதால், நியூசிலாந்து வீரர்களும் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிஸ்ட் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் இன்றும் குல்தீப், சாஹலிடம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளனர் நியூசிலாந்து வீரர்கள்.  இதே மைதானத்தில்தான் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணியினர் 371, 319 ரன்கள் சேர்த்திருந்தனர். ஆனால், இந்த போட்டியில் அதற்கு எதிர்மாறாக விளையாடி தோல்வி அடைந்துள்ளனர்.

 இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் ஆகிய மூன்றும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவுக்கு கேட்சை கோட்டைவிட்டனர், தவணுக்கு ஒரு கேட்ச் என பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டனர். பந்துவீச்சிலும், இந்தியாவின் தொடக்க கூட்டணியை பிரிக்க முடியாமல் திணறியது டிரண்ட் போல்ட், பெர்குஷன் போன்ற பந்துவீச்சாளர்கள் உலகத் தரம்வாய்ந்தவர்களாக என்ற கேள்வியை எழுப்பியது. 

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. 325 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 40. 2 ஓவர்களில் 324 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிரேஸ்வெல் சேர்த்த 57 ரன்கள் சேர்த்ததே அதிகப்பட்சமாகும். மற்ற வீரர்கள் அனைவரும் சராசரியாக 20 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். கடந்த போட்டியில் கேப்டன் வில்லியம்ஸன் மட்டும் அரைசதம் அடித்திருந்தார், இந்த போட்டியில் பிரேஸ்வெல் மட்டும் அடித்துள்ளார். 

தொடக்கத்தில் இருந்தே நியூசிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தனர். 136 ரன்களை எட்டும்போது அந்த அணியினர் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தனர். கப்தில்(15), வில்லியம்ஸன்(20), முன்ரோ(31),டெய்லர்(22), லாதம்(34) ஆகிய 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. கப்திலும், முன்ரோவும் தொடக்கத்தில் அதிரடியாகத் தொடங்கினால், இந்த கூட்டணி 5 ஓவர்கள் வரை நீடிக்கவில்லை. 5-வது ஓவரில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் கப்தில் 15 ரன்னில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது ஓவரில் தோனி ஒரு கேட்சை கப்திலுக்கு கோட்டை விட்டார். அதன்பின்பாவது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார் என்ற எதிர்பார்த்தும் கப்தில் வெளியேறினார். 

முகமதுஷமி வீசிய 8-வது ஓவரில் வில்லியம்ஸன் 20 ரன்கள் சேர்த்திருந்தபோது கிளீன் போல்டாகி வெளியேறினார். முன்னதாக ஷமி ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்களையும், பவுண்டரியையும் விளாசினார் வில்லியம்ஸன். ஆனால், 4-வது பந்தில் கிளீன் போல்டாகினார். 
15 ஓவரில் முன்ரோ 31 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் பெவிலியன் திரும்பினார். அதைத் தொடர்ந்து ஜாதவின் 18ஓவரில் டெய்லரும், 25 ஓவரில் குல்தீப் பந்துவீச்சில் லாதமும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

அதன்பின் தாக்குப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குல்தீப் சுழலில் சிக்கினார்கள். 30வது ஓவரில் 4 மற்றும் 5-வது பந்தில் அடுத்தடுத்து நிகோலஸ்(28), சோதி டக்அவுட் ஆகி வெளியேறியது நியூசிலாந்து அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. ஆனால், டெய்லண்டராக களமிறங்கிய பிரேஸ்வெல் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்தார். கடைசி வரிசையில்களமிறங்கிய பேட்ஸ்மேனின் அதிரடி ஆட்டத்தைக் கூட முன்வரிசையில் இறங்கிய வீரர்களால் விளையாட முடியவில்லை என்பது சோகமாகும். 

காட்டடி அடித்த பிரேஸ்வெல் 35 பந்துகளில் அரைசதம் அடித்து  57 ரன்களில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் வெளியேறினார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்  அடங்கும்.  40.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், யஜுவேந்திர சாஹல், புவனேஷ்குமார்  தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

முன்னதாக டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. ரோஹித் சர்மா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினார். டிரண்ட் போல்ட் வீசிய முதல் ஓவர், முதல் பந்திலேயே ரோஹித் ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால், ஸ்லிப் பீல்டர் சிறிது தள்ளி நிறுத்தப்பட்டதால், பந்து பவுண்டரிக்குச் சென்றது.

தொடக்க வீரர்கள் ரோஹித், தவண் கூட்டணி நிதானமாகத் தொடங்கி பின்னர் அதிரடிக்கு மாறினார்கள். நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை அடித்து சிதறடித்தனர். இதனால், ஓவருக்கு 6 ரன்ரேட் வீதம் சென்றது. ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி அடித்து ரன் ரேட் கீழே சரியாமல் கொண்டு சென்றனர்
9 ஓவர்களில் 50 ரன்களையும், 17 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது. ரோஹித் சர்மா 62 பந்துகளிலும், தவண் 53 பந்துகளிலும் அரை சதத்தை எட்டினார். இருவரின் தொடக்க கூட்டணி 14-வது முறையாக 100 ரன்களைத் தாண்டியது. அரை சதம் கடந்த பின் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பறக்க விட்டனர். இதனால், தொடக்கக் கூட்டணியே 200 ரன்களை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

டிரண்ட் போல்ட் வீசிய 26-வது ஓவரில் ஷிகர் தவண் 66 ரன்கள் சேர்த்த நிலையில், லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தவண் கணக்கில் 9 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 154 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த கோலி, ரோஹித்துடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்துவந்தனர். சதத்தை நோக்கி ரோஹித் முன்னேறிய நிலையில், பெர்குஷன் பந்துவீச்சில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் கணக்கில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.

3-வது விக்கெட்டுக்கு கோலி, ராயுடு இருவரும் விக்கெட் சரியாமல் நிதானத்தை கடைபிடித்தனர். கோலியின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் காணப்பட்டால், நிதானம் தென்பட்டதால், மோசமான பந்துகளை மட்டும் தேர்வு செய்து பவுண்டரிகள் அடித்தார். இருவரின் நிதானமான ஆட்டத்தால், ரன்வேகம் திடீரென சரிந்தது.

40 ஓவரை போல்ட் வீசினார். 43 ரன்கள் சேர்த்த நிலையில் சோதியிடம் கேட்ச் கொடுத்து கோலி வெளியேறினார். இவர் கணக்கில் 5 பவுண்டரிகள். இருவரும் 64ரன்கள் சேர்த்தனர். அடுத்துக் களமிறங்கிய தோனி, ராயுடுவுடன் சேர்ந்தார்.இருவரின் திடீர் மந்த ஆட்டத்தால், ஸ்கோர் மெல்லவே உயர்ந்தது. இருவரும் ஒரு ரன், இரு ரன்கள் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டினர். 40 ஓவர்களுக்கு மேல் அடித்து ஆட வேண்டிய நிலையில் மந்தமாக பேட் செய்தது ரன் வேகத்தை மட்டுப்படுத்தும். ராயுடு 47 ரன்களில் பெர்குஷன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

5-வது விக்கெட்டுக்கு கேதாவ், தோனியுடன் இணைந்தார். யாதவ் களமிறங்கியபின் ஆட்டத்தில் வேகம் எடுத்தது. தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜாதவ் காட்டடி அடித்தார். ஸ்கோர் 300 ரன்களை 49 ஓவர்களில் கடந்தது. கடைசி ஓவரில் ஜாதவ் இரு பவுண்டரிஸ ஒருசிக்ஸர் அடிக்க, தோனி பவுண்டரி அடித்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் சேர்த்தது. தோனி 33 பந்துகளில் 48 ரன்களுடனும், ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் பெர்குஷன், போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close