[X] Close

யாரை நோக்கியும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்னை மன்னித்து விடுங்கள்: நிறவெறி வசையில் சிக்கிய பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்


sarfraz-ahmed-pakistan-south-africa-odi-racist-comment-apology

  • முத்துக்குமார்
  • Posted: 24 Jan, 2019 17:09 pm
  • அ+ அ-

தென் ஆப்பிரிக்க வீரர் பெலுக்வயோவை நோக்கி அவர் நிறத்தைச் சுட்டி நிறவெறித்தனமான வசை பாடிய பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட் தொடர் ட்வீட்களில் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார்.

 “ஏய் கருப்புப் பயலே, உன் அம்மா எங்கே? உனக்காக என்ன பிரார்த்தனைச் செய்ய கூறினாய்” என்று சர்பராஸ் அகமெட் பேசியது ஸ்டம்ப் மைக்கில் கேட்க சர்ச்சை கிளம்பியது, சர்பராஸ் மீது கடும் கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சர்பராஸ் அகமெட் செயலைக் கடுமையாகக் கண்டிக்க சர்பராஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார்:

ஸ்டம்ப் மைக்கில் துரதிர்ஷ்டவசமாகக் கேட்டு விட்ட, ஆட்டத்தின் போக்கில் ஏற்பட்ட வெறுப்பில் பேசிய என் வார்த்தைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால் நான் அவர்களிடம் நேர்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் வார்த்தைகள் எந்த ஒரு நபரையும் குறிப்பிட்டு நோக்கியதல்ல.

யாரையும் வருத்தமடையச் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. என் வார்த்தைகள் யாருக்கும் கேட்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கூட கூறப்படவில்லை. அது எதிரணி வீரராக இருக்கலாம், ரசிகர்களாக இருக்கலாம். நான் என் கடந்த காலம் போலவே, எதிர்காலத்திலும் உலகம் முழுதும் ஆடும் சக கிரிக்கெட் வீரர்களை சகோதரத்துவ உணர்வுடனேயே பார்ப்பேன். களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சகோதரத்துவ உணர்வுடன் செயல்படுவேன். 

என்று மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகள்ளே பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெடைச் சந்தித்து இது குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.

ஆனாலும் சர்பராஸ் மீது ஐசிசி நிறவெறித் தடை விதிமுறை பாயுமா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close