[X] Close

டாஸ் தோற்றவுடன் இது 300 ரன் மேட்ச் என்று நினைத்தேன்: அபார வெற்றிக்குப் பிறகு கேப்டன் விராட் கோலி


virat-kohli-interview-india-nz-first-odi-napier-shami-man-of-the-match

  • முத்துக்குமார்
  • Posted: 23 Jan, 2019 16:22 pm
  • அ+ அ-

நியூஸிலாந்து அணியை நேப்பியர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நசுக்கியது என்றால் மிகையாகாது.  157 ரன்களுக்குச் சுருட்டி பிறகு 8 விக்கெட்டுகளில் வென்றது உண்மையில் நியூசிலாந்து அணிக்கு மீதமிருக்கும் போட்டிகளில் பெரிய சவால் காத்திருக்கிறது என்பதை முன் கூட்டியே அறிவித்துள்ளது. 

சாஹல், குல்தீப் யாதவ்வை அவர்கள் ஆட முடியவில்லை, குறிப்பாக சாஹல் வீசிய குறைவான வேகம் ராஸ் டெய்லர்,  டாம் லேதமைக் குழப்பியது, பந்து வந்தவுடன் பேக்ஃபுட்டில் ஆடுவதுதான் சிறந்தது, ஆனால் மேலேறி வந்தனர், பந்து வரவேயில்லை, அதனால் சாஹலிடமே இருவரும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

குல்தீப் யாதவ் பின்வரிசையைக் காலி செய்தார்.  ஒருவிதத்தில் பார்த்தால் ஆஸ்திரேலியாவாகட்டும், நியூஸிலாந்தாகட்டும் (இந்தப் போட்டி வரை) வங்கதேச அணி தங்கள் சொந்த நாட்டில் கொடுக்கும் சவால்களைக் கூட கொடுக்க முடியாமல் ஆடுகின்றனர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி கூறியதாவது:

கடந்த சில ஆட்டங்களில் எங்களது சமச்சீரான ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தினோம், டாஸை இழந்தவிடன் இது 300 ரன் போட்டி என்றே நினைத்தேன். இந்தப் பிட்சில் 150+க்கு அவர்களைச் சுருட்டியது கிரேட். 

வேகப்பந்து வரிசை எந்த ஒரு அணியையும் காலி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் திகழ்கின்றனர். ஷமியின் தன்னம்பிக்கை, அவரது பிட்னெஸ் அபாரம், நல்ல உடற்தகுதியுடன் அவர் இருப்பதை இப்போதுதான் நான் பார்க்கிறேன். அவர் தன் டெஸ்ட் ஃபார்மை ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் மாற்றிவிட்டார்.

2வது பாதியில் பிட்ச் கொஞ்சம்  மந்தமடைந்தது, முதல் பாதியில் ஸ்பின்னர்கள் அபாரமாக வீசினர். பேட்ஸ்மென்களுக்கு ரூம் கொடுக்காமல் கிடுக்கிப் பிடி போட்டனர்.  களத்தில் பலதரப்பட்ட பரிமாணங்கல் இருந்த போதும் அவர்களுக்கு கடினமாக்கினர். 

தவணுக்கு மிக முக்கியமான இன்னிங்ஸ், அவர் இந்தியாவுக்காக போட்டிகளை பினிஷ் செய்து கொடுக்க வேண்டியது பற்றி பேசினோம், அவர் இத்தகைய மனநிலையில் ஆடினால் மிகப்பெரிய சொத்துதான். 2014ல் ஒருமுறை சூரியன் எனக்கு நேராக வந்து கண்பார்வையை மறைத்து ஆட்டமிழந்தேன், ஆனால் அப்போது இந்த விதிமுறை இல்லை. 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close