[X] Close

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா செய்ததை நாங்களும் செய்வோம்: இலங்கை அணி நம்பிக்கை


australia-srilanka-2019-test-series-india-rumesh-ratnayake

  • முத்துக்குமார்
  • Posted: 22 Jan, 2019 20:37 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு என்ன செய்ததோ அதை தாங்களும் செய்ய முடியும் என்று இலங்கை அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர், முன்னாள் யாக்கர் ஸ்பெஷலிஸ்ட், ருமேஷ் ரத்னாயகே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது, இதில் பிரிஸ்பனில் பகலிரவு டெஸ்ட்டும் அடுத்ததாக கான்பெராவில் 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. 

ருமேஷ் ரத்னாயகே கூறியதாவது:

2 டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணியின் பவுலிங் உத்திகளை ஆராய்ந்து வருகிறோம். எந்தெந்த இடங்களில் இந்திய பவுலர்கள் வீசினார்கள் என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். அதாவது இந்திய அணி பவுலர்கள் என்ன செய்தார்களோ, மற்ற அணியினர் என்ன செய்தார்களோ அதை நாமும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை பவுலர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விஷயமாகும் இது. அந்த நம்பிக்கையைத்தான் இப்போதைக்கு நாங்கள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.

பேட்டிங், பவுலிங், ஏன் பீல்டிங்கிலும் கூட இந்திய அணி நிரூபித்துள்ளது, எங்கு சென்றாலும் நிரூபித்து வருகின்றனர். இதைத்தான் இந்திய அணியிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். இங்கு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளோம். நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா செல்கிறோம். ஆகவே ஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டும் என்பது விருப்பம்.. பார்ப்போம்.

இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு உள்ளது. காயமடைந்துள்ள ஆஸ்திரேலியா இது மிகவும் அரிதானதே. ஆனால் காயமடைந்த ஆஸ்திரேலிய அணி அதன் காரணமாகவே சிறப்பாகவும் இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு கூறினார் ருமேஷ் ரத்னாயகே.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close