[X] Close

ரன்வீரை தொடர்ந்து பரினீதி சோப்ராவும் ஐபிஎல் விழாவில் ஆடவில்லை என அறிவிப்பு


parineeti-chopra-ipl-inaugural-event-ipl-performance-ipl-2018

ரன்வீர் சிங் - பரினீதி சோப்ரா

  • kamadenu
  • Posted: 05 Apr, 2018 18:35 pm
  • அ+ அ-

ஐபிஎல் துவக்க விழாவில் ஆடவிருந்த ரன்வீர் சிங், காயம் காரணமாக அதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது நடிகை பரினீதி சோப்ராவும் துவக்க விழாவில் ஆட முடியாதென்று விலகியுள்ளார். தான் இன்னும் அதற்காகத் தேவையான அளவு தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் துவக்க விழாவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், விழாவில் நடனம் ஆடவிருந்த நடிகர் ரன்வீர் சிங், தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக, மருத்துவரின் அறிவுரையின் பேரில் விழாவில் நடனமாடப் போவதில்லை என்று சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். தற்போது நடிகை பரினீதி சோப்ராவும், விழாவில் தான் நடனமாடவில்லை என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பரினீதியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரினீதி 'நமஸ்தே லண்டன்' படத்துக்காக, பாட்டியாலாவில் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதனால், துரதிர்ஷ்டவசமாக, எவ்வளவு முயற்சித்தும் விழாவுக்கான ஒத்திகைக்கு போதிய நேரத்தை அவரால் செலவிட முடியவில்லை. 

விழா தயாரிப்பாளர்களிடம் பரினீதி பேசியுள்ளார். சமரசம் செய்து கொண்டு ஆடுவதில் விருப்பமில்லை என்று அவர் கூறியதால், தயாரிப்பாளர்களும் பரினீதியின் நிலையை புரிந்து கொண்டு இதற்கு ஒப்புக் கொண்டு விட்டனர். பரினீதி ஐபிஎல் துவக்க விழாவில் நடனமாடமாட்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close