[X] Close

நீங்க தனியாளு இல்லை, நான் இருக்கேன்: விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு உதவும்  கங்குலி


sourav-ganguly-comes-to-aid-of-stricken-former-india-team-mate-jacob-martin

  • போத்திராஜ்
  • Posted: 21 Jan, 2019 17:23 pm
  • அ+ அ-

 

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிவரும் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மருத்துவச் செலவுக்கு உதவுவதாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி  தெரிவித்துள்ளார்.

கங்குலி கேப்டனாக இருந்தபோதும், சச்சின் கேப்டனாக இருந்தபோதும் அணியில் இடம் பெற்றவர் பரோடா வீரர் ஜேக்கப் மார்டிங். கங்குலி தலைமையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பின் பெரும்பாலும் முதல் தரப் போட்டிகளிலும் ரஞ்சி ஆட்டங்களிலும் ஜேக்கப் விளையாடி வந்துள்ளார்.

பரோடா அணிக்கு ரஞ்சிக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்த பெருமையும் ஜேக்கப் மார்டினையே சேரும். இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி பரோடாவில் ஒரு கார்விபத்தில் ஜேக்கப் மார்டின் படுகாயமடைந்தார்.

தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்சை சுவாசம் அளிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். ஜேக்கப் மார்டின் மனைவி, பிசிசிஐ நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு உதவும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பிசிசிஐ நிர்வாகம் ரூ.5 லட்சமும், பரோடா கிரிக்கெட் அமைப்பு ரூ.3 லட்சமும் அளித்துள்ளது.

ஆனால், மருத்துவச் செலவு அதிகமாகும் என்பதால் என்ன செய்வது என்று மார்டின் மனைவி தவித்து வந்தார். இந்நிலையில், ஊடகங்கள் மூலம் தனது சகவீரர் உயிருக்குப் போராடுவதை அறிந்த கங்குலி உதவி செய்ய முன்வந்துள்ளார்.

கங்குலி ஆங்கிலநாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “ நானும் மார்டினும் ஒரே அணியில் விளையாடி இருக்கிறோம். அவரை நன்கு தெரியும், மிகவும் நல்ல மனதுடையவர். மார்டின் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். மார்டின் குடும்பத்தார் தனியாக இல்லை அவர்களுக்கு உதவ நான் இருக்கிறேன், மருத்துவச் செலவை ஏற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பரோடா கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சய் படேல் கூறுகையில், “ மார்டின் உடல் குறித்து அறிந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இர்பான் பதான், யூசுப் பதான், முன்னாள் வீரர் முனாப் படேல், ஜாகீர்கான் ஆகியோர் மார்டின் மருத்துவச் செலவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேக்கப் மார்டின் 158 ரன்கள் சேர்த்துள்ளார். சச்சின், கங்குலி தலைமையில் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். 138 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள ஜேக்கப் 9,192 ரன்கள் சேர்த்துள்ளார். 2000-01 ரஞ்சிக்கோப்பையை பரோடா அணிக்கு ஜேக்கப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close