[X] Close
 

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: கர்ணம் மல்லேஸ்வரி பாராட்டு


it-s-a-good-start-for-our-players-karnam-malleswari

  • பாரதி
  • Posted: 05 Apr, 2018 13:01 pm
  • அ+ அ-

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்த மீராபாய் சானுவை முன்னாள் வீராங்கனை கர்னம் கர்ணம் மல்லேஸ்வரி பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள்  பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரைச் சேர்ந்த 23 வயதான சானு 48 கிலோ எடை பிரிவில்,  தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்ததுடன் காமன்வெல்த் போட்டியில் தனது புதிய சாதனையும் படைத்திருக்கிறார்.
இந்நிலையில், ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, தற்போது தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

"நமது வீரர்களுக்கு நல்லதொரு துவக்கம் இது. சானுவின் தங்கப்பதக்கம் மற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். சனுவின் விளையாட்டு வியத்தகு வகையில் இருந்தது. ஆரம்பத்திலிருந்தே அவர் தங்கத்தைக் குறிவைத்தே நகர்ந்தார். இதன் மூலம் வரும் ஒலிம்பிக் போட்டியிலும் நமக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.



MGR - Kindle Edition


[X] Close