[X] Close

அது என்ன 500 டாலர்கள்? இந்திய அணிக்கு ரொக்கப்பரிசு இல்லை...: கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கஞ்சத்தனத்தை விளாசும் சுனில் கவாஸ்கர்


india-win-series-no-price-money-sunil-gavaskar-dhoni-chahal

  • முத்துக்குமார்
  • Posted: 19 Jan, 2019 15:09 pm
  • அ+ அ-

டெஸ்ட் தொடரை முதன் முதலாக இந்தியாவுக்காக மட்டுமன்றி, துணைக்கண்டத்துக்காகவும் சேர்ந்து ஆஸ்திரேலியாவில் வென்ற விராட் கோலி தலைமை இந்திய அணி இருதரப்பு ஒருநாள் தொடரிலும் வென்று வரலாறு படைத்தது.

இந்நிலையில் இந்த வெற்றிக்காக இந்திய அணிக்கு ரொக்கப் பரிசை ஏன் ஆஸ்திரேலியா வழங்கவில்லை என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்ட நாயகன் யஜுவேந்திர சாஹல், தொடர் நாயகன் தோனிக்கு 500 டாலர் காசோலைகள் வழங்கப்பட்டன, இருவரும் அந்தத் தொகையினை அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக அளித்து விட்டனர்.

ஆனால் இந்திய அணிக்கு கோப்பை மட்டுமே பரிசளிக்கப்பட்டது. ரொக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை, இதனையடுத்து சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விளாசிய போது, “அது என்ன 500 டாலர்கள், இந்திய அணிக்கு வெறும் டிராபி மட்டுமே என்பது வேதனை. அவர்கள் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் ஏகப்பட்ட லாபம் சம்பாதிக்கின்றனர். இப்படியிருக்கையில் இந்திய அணிக்கு ரொக்கப் பரிசு அளித்தால் என்ன? வீரர்கள் மூலம்தானே அவர்கள் லாபம் சம்பாதிக்கின்றனர்?

விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் கொடுக்கும் பரிசுத்தொகையினைப் பாருங்கள். அது மிகப்பெரிய தொகை. வீரர்கள்தான் வருவாயை உருவாக்குகின்றனர், ஆகவே அவர்களுக்கும் கொஞ்சம் தாராளமாகக் கொடுக்க வேண்டும்” என்று விளாசினார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close