[X] Close

அப்ரிடிக்கு நேரம் சரியில்லை: ‘பொறிந்து தள்ளிய’ சச்சின்


sachin-tendulkar-on-shahid-afridi-s-kashmir-remark

  • போத்திராஜ்
  • Posted: 04 Apr, 2018 23:51 pm
  • அ+ அ-

காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சர்ச்சைக்குரிய ட்விட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

காஷ்மீர் பகுதியில் சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்  ஷாகித் அப்ரிடி சர்ச்சைக்குரிய வகையில் நேற்று ட்விட் செய்திருந்தார்.

அதில், “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் சுதந்திரம் கோரி போராடும் அப்பாவி மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்படுகிறார்கள். இதைத் தடுக்க ஐநா தலையிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த ட்விட்டுக்கு அடுத்த சில மணிநேரங்களில் மூத்த வீரர் கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்தார். “நோ-பாலில் விக்கெட் விழுந்ததைப் போல் அப்ரிடி மகிழ்ச்சி அடைகிறார். அவரின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் முதிர்ச்சியில்லாதவர்” என்றார்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “நாட்டின் நலனுக்கு விரோதமான எந்த விஷயத்தையும் நான் ஆதரிக்கமாட்டேன்” என்று அப்ரிடியை கடிந்திருந்தார். “அப்பிரிடி யார், அவரின் பேச்சுக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறீர்கள்” என்று ‘லிஜென்ட்’ கபில்தேவ் கண்டனம் தெரிவித்தார்.

இளம் வீரர் சுரேஷ் ரெய்னா விடுத்த ட்விட்டில், “அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதையும், தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துவதையும் செய்யும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அப்ரிடி அறிவுரை கூறட்டும் இந்தியாவுக்கு வேண்டாம்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுலர், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “இந்த நாட்டை வெற்றிகரமாக, சிறப்பாக, வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் செல்லும் அளவுக்க தகுதியான, திறமையான ஆட்சியாளர்களைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம். ஆதலால், வெளிநாட்டைச் சேர்ந்த, எங்களுக்கு தொடர்பில்லாத யாரும், நாங்கள் அவசியம் என்ன செய்ய வேண்டும், என்ன தெரிந்து கொள்ளவேண்டும் என்பதை கூறத் தேவையில்லை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close