[X] Close
 

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்: விராட் வலு, அஸ்வினுக்கு சறுக்கல்


virat-kohli-retains-second-spot-r-ashwin-slips

  • போத்திராஜ்
  • Posted: 04 Apr, 2018 17:26 pm
  • அ+ அ-

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2-ம் இடத்தில் நீடிக்கிறார்.

அதேசமயம் மற்ற வீரர்களான அஜின்கயே ரஹானே, லோக்கேஷ் ராகுல், ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மன்,பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் 912 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-ம் இடத்தில் நீடித்து வருகிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இங்கிலாந்து வீரர் ஜோய் ரூட்(867) 3-வது இடத்திலும், நியூசிலாந்த வீரர் கேன் வில்லியம்சன்(847)4-வது இடத்திலும் ,ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்(820)5-வது இடத்திலும் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி.டீவில்லியர்ஸ்(813) 6-வது இடத்திலும், 810 புள்ளிகளுடன் இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா 7-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறார்கள்.

இந்திய பேட்ஸ்மன்கள் ரஹானே 660 புள்ளிகளுடன் 18-வது இடத்துக்கு சரிந்துள்ளார், மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 657 புள்ளிகளுடன் 19-வது இடத்தில் பின்னடைந்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம்(759) முதல்முறையாக 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் முதல் 10 டெஸ்ட்  போட்டிகளில் 1000 ரன்களைக் குவித்தவர்கள் வரிசையிலும் மார்க்ரம் இடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 803 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு சரிந்துள்ளார். ரவிந்திர ஜடேஜா 844 புள்ளிகளுடன் 4-வது நிலையில் பின்னடைந்துள்ளார்.

முதல் மூன்று இடங்களில் முறையே தென் ஆப்பிரிக்க வீரர் காகிஸோ ரபாடா(897புள்ளிகள்) முதலிடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன்(891) 2வது, தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர்(845) 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் 10 ரேங்கிக்கில் இடம் பெற்ற தென் ஆப்பிரிக்க வீரர் மோர்ன் மார்க்கல் 6-வது இடத்தில், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உடன் பகிர்ந்துள்ளார்.

நியூசிலாந்து வீரர் டிம் சவூதி 3 இடங்கள் முன்னேறி 13-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 5 இடங்கள் முன்னேறி 12-வது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார்.



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close