[X] Close

சச்சினைப் போன்று விளையாடுகிறார்: விராட் கோலிக்கு ஜஸ்டின் லாங்கர் புகழாரம்


langer-speech

ஜஸ்டின் லாங்கர் - படம்: ஏஃப்பி

  • kamadenu
  • Posted: 17 Jan, 2019 10:07 am
  • அ+ அ-

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடி வருகிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறினார்.

நேற்று முன்தினம் அடிலெய்டில் நடைபெற்ற இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது சர்வதேச ஒரு தின கிரிக் கெட் போட்டியில் இந்தியா 6 விக் கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய ஆஸ்தி ரேலியா 50 ஓவர்களில் 9 விக் கெட்கள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது.

கேரே 18, ஆரோன் பின்ச் 6, உஸ்மான் கவாஜா 21, ஷான் மார்ஷ் 131, ஹேண்ட்ஸ்காம்ப் 20, ஸ்டாய்னிஸ் 29, மேக்ஸ்வெல் 48, ரிச்சர்ட்சன் 2, லயன் 12 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4, முகமதுஷமி 3, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ரோஹித் சர்மா 43, ஷிகர் தவண் 32, அம்பதி ராயுடு 24 ரன்கள் எடுத் தனர். கேப்டன் கோலி 104 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். எம்.எஸ். தோனி 55 ரன்களும், தினேஷ் கார்த்திக் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒரு நாள் போட்டியில் 39-வது சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது: 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடினார். சமீபகாலமாக விராட் கோலியின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் சிறப்பாக உள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை மிக வும் அருகில் இருந்து பார்த்திருக் கிறேன். அவரைப் போன்றே விராட் கோலி விளையாடுகிறார்.

பந்தை விளாசும் டைமிங்கும், பாலன்ஸ் செய்து அவர் விளையாடும் நுணுக்கமும் நம்ப முடியாத வகையில் உள்ளது. 360 டிகிரி கோணங்களிலும் அவர் விளையாடி அசத்துகிறார்.

நான் ஒரு அணியை உருவாக்கினால் அதில் சச்சின், விராட் கோலி 2 பேருக்கும் இடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close