[X] Close

உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி இங்கிலாந்துதான், ஆனால் இந்தியா மிகவும் பின்னால் இல்லை: ஜேசன் கில்லஸ்பி


world-cup-2019-england-india-bumrah-gillespie-cricket

  • முத்துக்குமார்
  • Posted: 16 Jan, 2019 20:13 pm
  • அ+ அ-

2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் அணி இங்கிலாந்தாக இருக்கலாம், ஆனால் இந்திய அணி ரொம்பவும் பின் தங்கிவிடவில்லை, இந்திய அணியின் பந்து வீச்சினால் இங்கிலாந்துடன் இந்திய அணியும் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக உள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜேசன் கில்லஸ்பி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியப் பந்து வீச்சு சமச்சீராக உள்ளது. பும்ரா தெரிந்த காரணங்களுக்காகவே ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் இந்தியப் பந்து வீச்சு நன்றாகவே உள்ளது. 

ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் பவுலிங்கில் பங்களிக்கிறார்கள், இவர்களுடன் பும்ராவையும் சேர்த்தால் உலகக்கோப்பையில் சவாலை ஏற்படுத்துவார்கள்.  இங்கிலாந்துதான் உலகக்கோப்பையை வெல்ல சாதகமான அணி என்றாலும் இந்திய அணி மிகவும் பின்னால் இல்லை, அருகில் தான் உள்ளது.

பும்ரா பந்து வீசுவதைப் பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல வேகத்தில் வீசுகிறார், பேட்ஸ்மென்களை அவசரப்படுத்துகிறார். வேகத்தையும் குறைத்து வீசுகிறார். மிகப்பிரமாதமான பவுலர் அவர்.

அவரது ஆக்‌ஷன் போல் யாரும் வீச முடியாது, வலுவாக இருந்தால் மட்டுமே அந்த் ஆக்‌ஷன் சாத்தியம்.  அவரது உடல்தகுதியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் ஓவர்களை வீச ஏதுவாக உள்ளது. டெஸ்ட் முழுதும் நல்ல வேகத்தைப் பராமரிக்கிறார், இதுதான் அவரை சுவாரஸ்யமான பவுலராக மாற்றியுள்ளது. 

இவ்வாறு கூறுகிறார் கில்லஸ்பி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close