[X] Close
 

தண்டனையை ஏற்றுக் கொண்டுவிட்டேன், இனி மேல்முறையீடு இல்லை: ஸ்டீவன் ஸ்மித் முடிவு


smith-ban-ball-tampering-controversty-ban-challenge

கோப்புப் படம்: ஏ.எஃப்.பி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 04 Apr, 2018 14:41 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், பால் சேத விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு வருடத் தடையை எதிர்த்து மேல் முறையீடு கோர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தண்டனை நியாயமானதுதான் என்றும், இது மற்றவர்களுக்கு அழுத்தமான செய்தியாக இருக்கும் என்றும் ஸ்மித் கூறியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், விதிமுறைகளை மீறி பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பேன்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தண்டனை வழங்கியுள்ளது. தென்னாப்பிரிக்க தொடரை ஆஸ்திரேலியா 1-3 என்ற கணக்கில் இழந்தது தனிக்கதை. 

தற்போது, ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் தங்களுக்கு விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இந்த மூவரும் மேல் முறையீடு செய்யலாம். இதுபற்றி, "இந்த சம்பவத்தைக் கடந்து போக, மீண்டும் எனது நாட்டுக்காக விளையாட நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஆனால், அணியின் தலைவனாக நடந்தவைகளுக்கு முழு பொறுப்பு நான் தான் என்று கூறிய வார்த்தையில் உறுதியோடு இருக்கிறேன்.

எனவே எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வருட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மாட்டேன். இது கிரிக்கெட் வாரியத்தால் கொடுக்கப்பட்ட தண்டனை. ஒரு அழுத்தமான செய்தியாக இது இருக்கும் என்றே அவர்கள் இந்த தண்டனையை தந்துள்ளார்கள். அதை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன் " என்று ஸ்டீவன் ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டேவிட் வார்னர் மேல் முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவர் க்ரேக் டயர், இந்தத் தண்டனை மிகக் கடுமையானது என்றும், அளவுக்கதிகமானது என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

"இந்த மாதிரியான பந்து சேத குற்றத்துக்கு, இதற்கு முன் அதிகபட்சமாக 2 ஒருநாள் போட்டிகள் வரை வீரர்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றனர். 100 சதவீத சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனைக்குப் பின் இருக்கும் நோக்கம் சரியானதாக இருந்தாலும், கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை அளவுக்கதிகமானது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பின்பற்றும் விதிகளை விட அதிகமான அளவு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது" என்று க்ரேக் டயர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்மித் ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் இங்கிலீஷ் கவுன்ட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

-பிடிஐ

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close