[X] Close

மகளுக்கு முதல் பொம்மையை கருப்பு நிறத்தில் வாங்கிக் கொடுத்த செரீனா: நெகிழும் நெட்டிசன்கள்


serena-gives-first-toy-to-her-daughter-as-black

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 16 Jan, 2019 17:22 pm
  • அ+ அ-

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தன்னுடைய ஒரு வயது மகள் அலெக்சிஸ் ஒலிம்பியாவுக்கு முதன்முதலாக கருப்பு நிறத்தில் பொம்மையைப் பரிசளித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய செரீனா வில்லியம்ஸ், ''குவாய் குவாய் பொம்மையை அலெக்சிஸுக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறேன். முதன்முதலாக அவளுக்குக் கருப்பு நிற பொம்மையை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருந்தேன். நான் வளரும்போது கருப்பு பொம்மைகளை வைத்து விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த வாய்ப்பை என் மகளுக்கு அளித்திருக்கிறேன். மரபுரீதியாக அவள் கலப்புதான். கெளகேசியன் மற்றும் கருப்பினத்தில் கலவை அவள். அவளுக்கு முதல் பொம்மை கருப்பு நிறத்திலும் இரண்டாவது பொம்மை கெளகேசியனாக இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தேன்.

மனிதர்கள் என்ன நிறத்தில் இருந்தாலும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்பதை அவளுக்குச் சொல்லிக் கொடுப்பதே இதன் நோக்கம்'' என்று தெரிவித்தார்.

 

ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிப் புதிய உச்சத்தைத் தொட்ட செரீனா வில்லியம்ஸ், மெல்போர்னில் 24-வது கிராண்ட் ஸ்லாமைப் பெறத் தயாராகி வருகிறார். 

இதற்காக செரீனாஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலந்துகொள்ள, செரீனா மெல்போர்ன் சென்றுள்ளார். அவருடன் தனது மகள் மற்றும் 'குவாய் குவாய்' பொம்மையையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

குவாய் குவாய் பொம்மைக்கு இன்ஸ்டாகிராமில் தனிப் பக்கமே உள்ளது. இதனை சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். அதில் குவாய் குவாய் குறித்து 'செரீனா வீல்லியம்ஸ் மற்றும் ஒஹானியனின் பேத்தி' என்றும் 'மகள் ஒலிம்பியாவின் செல்லத் தோழி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

37 வயதாகும் செரீனாவுக்கும் ரெட்டிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் 2017-ல் திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டில் 8 வார கர்ப்பத்தோடு ஆஸ்திரேலிய ஓபனை செரீனா வென்றது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close