[X] Close

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சூப்பர் பவர்: கோலியின் ஆசை...


kohli-aim

  • kamadenu
  • Posted: 16 Jan, 2019 15:50 pm
  • அ+ அ-

இந்தியா சூப்பர் பவர் ஆக வேண்டும் என்பது இந்திய மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினரின் பேராசை, இது நீண்டகாலக் கனவாக இருந்து வந்துள்ளது, இன்னமும் உள்ளது, இதனை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் நேர அலங்கார, ஜோடனைப் பேச்சாகப் பயன்படுத்துவதுண்டு.

அந்த அலங்கார மேடைப்பேச்சை, மத்தியதர வர்க்க, மேல்தட்டு பேராசை ஜோடனையை தற்போது கிரிக்கெட்டுக்குக் கடத்தியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. ஏற்கெனவே பிசிசிஐ சூப்பர் பவர் போலத்தான் தனது செயல்திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில்...

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி கூறியிருப்பதாவது:

நான் அதனை இலக்கு என்று கூறவில்லை, என்னுடைய தொலைநோக்கு பற்றி நான் பேச விரும்புகிறேன். அது என்னவெனில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சூப்பர் பவராக வேண்டும் அல்லது வரும் காலங்களில் மிக மிக வலுவான அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக வேண்டும், இந்திய கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டை மதித்தால், இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை மதித்தால் இருக்கும் ரசிகர்கள் பலத்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் டாப்பில் இருக்கும்.

நாம் மேலதிகமாக குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினால்... இதுவும் முக்கியம்தான் மறுக்கவில்லை.. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் நமக்கு அளிக்கும் சவால், நெருக்கடியான தருணங்களிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக சாக்குபோக்கு முயற்சியாக குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் மீதான கவனம் இருக்குமானால் வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு மனப்பிரச்சினை ஏற்படவே செய்யும்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் 5 நாட்களும்  காலையில் எழுந்து கடினமான நேரத்தை செலவிட்டு, 2 மணி நேரம் ஆடத்துணிய வேண்டும் ரன் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, இதற்குத்தான் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.  அடுத்ததாக உள்ளே வருபவர்கள் இதே தொலைநோக்கைப் பராமரிக்க வேண்டும் அடுத்து வரும் தலைமுறையினர் இதைப் பின்பற்ற வேண்டும். என்னைப்பொறுத்தவரை நான் இருக்கும் வரை இந்தக் கலாச்சாரத்தை பேணி வளர்ப்பது உறுதி.

ரவிசாஸ்திரிக்கு ‘ஜிங் சக்’

2014 முதல் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது பற்றிய நேர்மையான பின்னூட்டங்களை ரவிசாஸ்திரி அளித்து வருகிறார். நான் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் எடுத்தேன் அப்போது ரவிசாஸ்திரி என்னை அழைத்துப் பேசும்போது பேட்டிங் பற்றி நான் உன்னிடம் எதுவும் பேசப்போவதில்லை, அதில் நான் உன் பேட்டிங் பற்றி பெருமையடைகிறேன். ஆனால் கேப்டனாக இந்த அணியிடமிருந்து எப்படி சிறந்தவற்றைப் பெற வேண்டும் உத்தி ரீதியாக எப்படி துல்லியமாக இருக்க வேண்டும் என்பதை விவாதிப்பேன் என்றார். இது என்னை அறைந்தது போல் இருந்தது. கேப்டன்சி என்பது எப்போதும் இன்னும் இன்னும் வேண்டும் என்ற துறையாகும் இதைத்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

சிறு சிறு பங்களிப்புகள் எப்படி பெரியது என்பதை அவர் கூறிய பிறகு உணர்ந்ததால் ஒரு கேப்டனாக வீரர்களை எப்படி ஊக்குவித்து அவர்களிடமிருந்து சிறந்தவற்றை பெற எனக்கு உதவியது.

சாஸ்திரி ஒருவர்தான்.. அவர் நிறைய போட்டிகளைப் பார்த்து வர்ணனை கூறியுள்ளார். அவரே நிறைய ஆடியுள்ளார். ஆட்டத்தைப் பார்க்கும் போதே அவருக்கு போட்டி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பது புரிகிறது.  சீராக அவரிடமிருந்து பின்னூட்டங்களைப் பெறுவது எனக்கு பெரிய அளவில் உதவி புரிகிறது. அதாவது என்னை ஒரு கேப்டனாக முதிர்ச்சியடைய, உருப்பெற உதவுகிறது. அதாவது என் ஆளுமையை என் கேப்டன்சியை வார்ப்பதிலும் உட்செலுத்த முடிகிறது.

நம் அணி தரவரிசையில் 7ம் இடத்தில் இருந்த போது அவர் ஒருவர்தான் இருந்தார். அவரின் கீழ்தான் மாற்றம் நிகழ்ந்தது. அதாவது நாங்கள் அச்சமின்றி ஆட வேண்டும் என்ற அவரது நோக்குதான் எங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளது, இது உண்மையில் அவருக்கு உரித்தான பெருமையை அளிக்கச் செய்வதற்கான விஷயம் ஆகும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close