[X] Close

தோனி களைப்படைந்த போது தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அவரது அழுத்தத்தை தளர்த்தியது: விராட் கோலி


dhoni-classic-virat-kohli-adileide-victory

  • முத்துக்குமார்
  • Posted: 16 Jan, 2019 14:16 pm
  • அ+ அ-

அடிலெய்ட் ஒருநாள் போட்டியில் தொடரைச் சமன் செய்யும் சிறப்பான சதத்தை கேப்டன் விராட் கோலி எடுக்க அவருக்கு உறுதுணையாக நின்று முடித்துக் கொடுத்தார் தோனி.

கோலி  ஆட்டமிழந்த பிறகு கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது, ஏனெனில் தோனி நின்று கொண்டிருக்கிறார், ஒன்று கோலி இருக்கும் வரை ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்த தோனி திடீரென சிட்னி ஒருநாள் போட்டி போல் பதுங்கி பிறகு பாயாமல் அவுட் ஆகிச் சென்றால்... என்று ஒரு புறம் பயம் ஏற்பட்ட நிலையிலும் தோனியும் உடலின் நீர்ச்சத்துக் குறைபாட்டினால் களைப்படைந்ததும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தினால் தோனியின் மீதான அழுத்தம் சற்றே குறைந்தது.

கோலி தன் 39வது சதத்தை எடுத்த போது இலக்கை எட்ட 57 ரன்கள் தேவைப்பட்டது. உஷ்ணத்தில் நீர்ச்சத்து குறைய தோனியும் களைப்படைந்து கொண்டிருந்தார். உடற்கூறு நிபுணர் வந்து தோனிக்கு சிகிச்சை அளிக்க நேரிட்டது. அழுத்தம் இருந்தது, ஏற்பட்டது உண்மை, மீண்டும் தினேஷ் கார்த்திக்கிற்குத்தான் கடும் நெருக்கடி, அழுத்தம்... ஒவ்வொரு முறை தினேஷ் இறங்கும் போதும் இப்படி ஏதாவது ஒரு அழுத்தமான சூழல்தான் இருந்து வருகிறது. ஆனால் தினேஷ் கார்த்திக் தன் மேலிருந்த அழுத்தத்தையும் தோனியின் மீதான அழுத்தத்தையும் சிறப்பாக அகற்றினார், இதைத்தான் விராட் கோலி போட்டி முடிந்தவுடனான சந்திப்பில் கூறினார்.

கோலி கூறியதாவது:

தோனி அணியின் ஒரு அங்கமாக இருந்தாக வேண்டும். சமீபத்தில் அவர் அதிக கிரிக்கெட் போட்டிகளில் ஆடாவிட்டாலும் களத்தில் நின்று வெற்றி பெற்று கொடுக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், இந்த இன்னிங்ஸ் எம்.எஸ். கிளாசிக்.  ஆட்டத்தை முடிவு வரை கொண்டு சென்றார். அவர் மனதில் என்ன நினைத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும். ஆட்டத்தை மிகச்சரியாக அவர் கணக்கிடுவார். தேவைப்படும் போது பெரிய ஷாட்களை அடிப்பார், ஆகவே ஹேட்ஸ் ஆஃப்.

தினேஷும்தான், தோனி கொஞ்சம் களைப்படைந்த போது அவர் மீதான அழுத்தத்தை தினேஷ் அடித்து ஆடி போக்கினார். தினேஷ் இறங்கினார், சரியான தன்மையுடன் கூடிய தீவிரத் தன்மையை வெளிப்படுத்தினார்.

தோனி எப்போதும் போல் அமைதியான ஆட்டம், என்னையும் கூட அவர் அமைதி காக்க வைத்தார். நான் எங்காவது உணர்ச்சிவசப்பட்டு மோசமான ஷாட்டை ஆடி விடுவேன் என்று அவர் நினைத்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக ஆடினோம், இருவருக்குமே இந்த ஆட்டம் சிறப்பு வாய்ந்தது.

இவ்வாறு கூறினார் கோலி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close