[X] Close
 

தோள்பட்டையில் காயம்; ஐபிஎல் தொடக்கவிழாவில் ரன்வீர் நடனமில்லை


ranveer-singh-not-to-perform-at-ipl-opening-ceremony-due-to-injury

  • பாரதி
  • Posted: 02 Apr, 2018 13:12 pm
  • அ+ அ-

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2018 தொடக்கவிழாவில் ரன்வீர் சிங் நடனமாடமாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 7-ம் தேதி (ஏப்ரல் 7-ம் தேதி) தொடங்கவிருக்கிறது.

இப்போட்டியில், பாலிவுட் நடிகரான் ரன்வீர் சிங் நடனம் இடம்பெறுவதாகக் கூறப்பட்டது. வெறும் 15 நிமிட நடனதுக்கு அவர் ரூ.6 கோடி கேட்டதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2018 தொடக்கவிழாவில் ரன்வீர் சிங் நடனமாடமாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

ரன்வீருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவர், அவரது தோள்பட்டைக்கு எவ்வித சிரமமும் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தியதின் பேரில் ரன்வீர் தொடக்கவிழா நடனத்தை கைவிட்டத்தாக செய்தித் தொடர்பாளர் விளக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close