[X] Close
 

நான் விளையாடிய அணிகளிலே சிஎஸ்கே வித்தியாசமானது: இம்ரான் தாஹீர்


how-lucky-iam-to-be-picked-up-by-csk-says-imaran-tahir

  • kamadenu
  • Posted: 31 Mar, 2018 15:27 pm
  • அ+ அ-

நான் விளையாடிய அணிகளிலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக வித்தியாசமானது என்று  இம்ரான் தாஹீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிக்கான 11-வது சீசன் வரும் ஏப்ரம் 7 ஆம் தேதி  மும்பையில் தொடங்குகிறது.

2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிக்குள் உற்சாகமாக தோனி தலைமையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்த புதுவரவு வீரர்கள் அந்த அணியுடனான அவர்களது உறவு குறித்து தங்கள் பகிர்ந்து வருகின்றார்கள்.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹீர் கூறும்போது, "சிஎஸ்கே அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் எவ்வளவு அதிஷ்டமானவன் என்று ஒவ்வொரு நாளும்  நினைவு கொள்கிறேன். நான் விளையாடிய கிளப் அணிகளிலே சிஎஸ்கே மிக வித்தியாசமானது. கிரிக்கெட் மீது சிஎஸ்கே ரசிகர்கள் வைத்துள்ள பற்று எனக்கு சிறப்பான இடத்தை அளித்துள்ளது.

அணியின் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். எங்களது சிறப்பான பங்களிப்பை அளிப்போம் என்று உறுதி அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close