[X] Close

 ரசிகர்கள் சூழ சென்னை பீச் சாலையை வலம் வந்த சிஎஸ்கே வீரர்கள்


chennai-super-kings-players-road-trip

  • kamadenu
  • Posted: 29 Mar, 2018 15:26 pm
  • அ+ அ-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்தில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள்  பீச் சாலையில் ரசிகர்கள் சூழ வலம் வந்தனர். 

ஐபிஎல் 11- வது சீசன் வருன் ஏப்ரல் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டமாக துவங்குகிறது.

இந்த ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின் திரும்பியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சி ஆட்டங்களை காண ரசிகர்கள் நாள்தோறும் கூட்டமாக சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அணி வீரர்களாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்தில் புதன்கிழமை தோனி, பிராவோ, விஜய், தாஹிர், ஹர்பஜன் பல நட்சத்திர வீரர்கள் சென்னை பீச்  சாலையில்  இரு புறமும் ரசிகர்கள் சூழ வலம் வந்தனர்.

டுவைன் பிராவோ நடனம் ஆட அவருடன் இணைந்து ஹர்பஜனும் நடனம் ஆடி கலக்கியிருக்கிறார். 

 

இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சென்னன் சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் வெளியிட்டுள்ளன. 

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close