[X] Close

வார்னர் மோசமான நபர் அல்ல: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்


warner-s-not-a-bad-person-williamson

  • இந்து குணசேகர்
  • Posted: 29 Mar, 2018 12:39 pm
  • அ+ அ-

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை பெற்றுள்ள டேவிட் வார்னர் அவ்வளவு மோசமான நபர் அல்ல என்று நியூசிலாந்து கேப்டன்  வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய  கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் வார்னர் மற்றும் ஸ்மித்தை மிகக் கடுமையாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்தன. 

இந்த நிலையில் டேவிட் வார்னரின் எல்.ஜி. ஆஸ்திரேலியா நிறுவனம் டேவிட் வார்னருடன் ஸ்பான்சர்ஷிப்பை தொடர வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

 தொடர்ந்து விமர்சனத்துக்கு ஆளகியிருந்த வார்னருக்கு ஆதரவாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வில்லியம்சன் கூறும்போது,  "நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்போது சில நேரங்களை ஒன்றாக செலவழித்திருக்கிறோம்.  வார்னர் மோசமான நபர் அல்ல. சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்கு வீரர்கள் மீது உணர்வுப்பூர்வ குற்றச்ச்சாட்டுகள் அதிகப்படியாக சென்றுள்ளன. 

வார்னர் தவறு செய்திருக்கிறார். அவர்கள் செயல்கள் மூலம் ஏமற்றமடைந்திருப்பதாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர்கள் கடுமையான தண்டணையை பெற்று அதனை கடக்க வேண்டும். நீங்கள் கடுமையான  சம்பவங்கள் மூலம்தான் பாடம் கற்றுக் கொள்வீர்கள். அவர்கள் அதை கண்டிப்பாக செய்வார்கள். உலக தரம்வாய்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் தவறு செய்திருப்பது அவமானமான ஒன்றுதான்" என்று கூறியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close