[X] Close

சிஎஸ்கே வெறும் டீம் அல்ல: ஒரு ரசிகையின் பட்டாம் பூச்சி பயணம்


dear-csk

  • இந்து குணசேகர்
  • Posted: 28 Mar, 2018 14:09 pm
  • அ+ அ-

சர்வதேச நாடுகளில் கால்பந்தாட்டத்தில்  ஆடும் கிளப் அணிகள் நமது நாட்டில் மிகப் பிரபலமாக இருந்த நேரம். ரியல் மேட்ரிட், பார்சிலோனா, அர்சினல் என எங்கோ இருக்கும் நகரத்தின் கவுரவத்தை தாங்கிப் பிடித்து மைதானத்தில் ஆடும் இந்த அணிகளின் ஆட்டத்தை நாம்  அலாரம் வைத்து நள்ளிரவு வரை கண்விழித்து பார்த்திருப்போம். இம்மாதிரியான கால்பந்து கிளப் அணிகள் நமது  நாட்டில் சாத்தியமா? என்ற கேள்வி எழும் போதெல்லாம் கூடவே கால்பந்து விளையாட்டுக்கான அங்கீகாரத்தையே நாம் இன்னும் இங்கு ஏற்படுத்தவில்லையே என்ற பதிலும் தோன்றிவிடும்.  

கால்பந்து கிளப் அணிகளுக்கு நிகராக இந்தியாவில் பிரபல நகரங்களைக் கொண்ட கிளப் அணிகள் கொண்ட விளையாட் போட்டிகள் நடைபெறவிருக்கிறது என்ற அறிவிப்பு 2007ல்- வந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இரு சகோதரர்களுடன் பிறந்ததாலும், தந்தையின் விளையாட்டு ஆர்வத்தாலும் இயல்பாகவே சிறு வயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. இதனால் இந்தியாவில் கிளப் அணிகளா அதுவும் கிரிக்கெட்டிலா என்று கிரிக்கெட்டின் மீது துளியும் ஆர்வமற்ற எனது தோழிகளை  கட்டாயப்படுத்திக் கேட்க வைத்திருக்கிறேன்.  

சென்னை சார்பாக ஆடும் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் அறிவிப்பட்டது. பெயர் சுமாராக இருக்கிறது ஆனால் என் நட்சத்திர வீர்ர் தோனி இங்குதானே இருக்கிறார் என்று தேற்றிக் கொண்டேன். போட்டிகளைத் தவறாமல் சோனி மெக்ஸில் எனது சகோதர்களுடன் பார்த்து விடுவேன். சென்னை அணியின் வெற்றி எனது வெற்றி, அவர்களின் தோல்வி எனது தோல்வி. தடை செய்யப்பட்ட இரண்டு வருடங்களைத் தவிர்த்து கடந்த 8 வருடங்களில் கண்ணுக்குத் தெரியாத உறவின் பிம்பத்தை அந்த அணியுடன் ஏற்படுத்திக் கொண்டேன்.

இவ்வாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கு. அந்தவகையில் சிஎஸ்கேவுடனான  ஒரு பெண்ணின் உண்மை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. 

ஆண் பெண் என்ற வேறுபாட்டில் வளரும் பெண் ஒருவர், படிப்புக்காக சென்னை வருகிறார்.  சிறுவயதில் பெற்றோர்களின்  விருப்பத்திற்கேற்ப விளையாட்டுகளைப் புறக்கணித்த பெண் ஒருவருக்குச் சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் போட்டி எத்தகைய அனுபவத்தைத் தருகிறது என்று அழகான காட்சிகளுடன் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.  

ஆம்... சிஎஸ்கே வெறும் டீம் அல்ல..... 

’டியர் சிஎஸ்கே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை ரவ்னக் மங்கோடில் இயக்கி இருக்கிறார். ’Fully filmy’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இவ்வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close