[X] Close
 

தினேஷ் கார்த்திக்கால் பணம் போச்சு! : கொல்லப்பட்டதாக நாடகம் ஆடிய சூதாட்டக்காரர்


fake-death-after-failed-cricket-bet

  • நெல்லை ஜனா
  • Posted: 27 Mar, 2018 17:02 pm
  • அ+ அ-

வங்கதேசத்தில், கிரிக்கெட் சூதாட்டத்தில் தோல்வியடைந்த ஒருவர்,  பணத்தை கொடுக்காமல் தப்பிப்பதற்காக, தான் கொலை செய்யப்பட்டதாக போலியாக வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பரவ விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா - வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டி கொழும்பில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இறுதியாகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அதில் கடைசி ஓவரின் இறுதிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்சர் அடித்து இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக அமைந்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்தப் பேட்டிங் இந்திய அளவில் அவருக்கு பாராட்டுகளைக் குவித்துவருகிறது.

ஆனால் இந்த கிரிக்கெட் போட்டியால், வங்கதேசத்தில் நடந்த கிரிக்கெட் சூதாட்டமும், கொலை நடந்ததாக நடத்தப்பட்ட நாடகமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி20 போட்டி தொடர்பாக வங்கதேசத்தில் சூதாட்டம் நடந்துள்ளது. இந்த போட்டியில் வங்கதேசம் வெற்றி பெறும் எனக் கூறி அந்நாட்டவர் பலர் லட்சக்கணக்கான ரூபாய் ‘பெட்’ கட்டியுள்ளனர். அவர்களில் அடில் ஷேக்தரும் ஒருவர். அவர், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ’பெட் கட்டியுள்ளார்.

இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தி்ன் போது ‘பெட்’ கட்டி 40,000 ஆயிரம் ரூபாய் பணம் சம்பாதித்துள்ளார் ஷேக்தர். அப்போது ஷேக்தர் கூறியபடி வங்கதேசம் வென்றது. இதில் 40,000 ரூபாய் பணத்தை வைத்து இஷ்டம் போல் ஜாலியாக இருந்துள்ளார். இந்த மகிழ்ச்சியில் இறுபோட்டியிலும் வங்கதேசமே வெல்லும் என கூறி அவர் மீண்டும் ‘பெட்’ கட்டியுள்ளர்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தொகைக்கு பெட்டி கட்டியுள்ளார். அரையிறுதியில் ஷேக்தரிடம் தோற்ற நபர், இந்த முறை பணத்தை கறந்து விட வேண்டும் என்ற இலக்குடன் மீண்டும் ஷேக்தரிடமே பெட் கட்டியுள்ளார்.

ஆனால் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் ஷேக்தரின் கணக்கு மாறியது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெட் கட்டிய அடில் ஷேக்தருக்கு என்ன தலை சுற்றியது. திடீரென ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என்பதால் உடனடியாக ஒரு யோசனை தோன்றியுள்ளது.

‘பெட்’ கட்டிய தான் இறந்து விட்டதாக மற்றவர்களை நம்ப வைத்து விட்டால் ‘பெட்’ கட்டிய நபர் பணம் கேட்க மாட்டார்ர் என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து தனது நண்பரின் உதவியுடன் போலி கொலை ஒன்றை அரங்கேற்றியுள்ளார். கழுத்து அறுப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அதற்காக சிகப்பு சாயத்தை ஊற்றியும் உயிரிழந்துள்ளது போன்று ஷேக்தர் நடித்துள்ளார்.

சினிமா மேக்ப் மேன் ஒருவரின் உதவியுடன் உண்மையிலேயே கொலை நடந்த்து போல காட்சிகளை வடிவமைத்து, அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனை தனது நண்பர் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பரவச் செய்துள்ளார்.

கிரிகெட் சூதாட்டத்தில் அக்தர் கொலை செய்யப்பட்டதாக வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கிரிக்கெட் சூதாட்டத்தின் கோர வடிவம் என பலரும் வேதனை தெரிவித்தனர். அக்தர் உயிரிழந்தது போன்ற காட்சியை சமூகவலை தளங்களில் ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியடைந்தனர்.

விஷயம் விஸ்வரூபம் எடுக்கவே, ஷேக்தர் தலைமறைவானார். அவரின் சடலத்தை தேடி போலீஸாரும், உறவினர்களும் அலைந்தனர். இதனிடையே போலி கொலையை வீடியோ எடுத்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்ததில் உண்மை வெளியானது.

ஷேக்தர் போலியாக இந்த சம்பவத்தை அரங்கேற்றியதையும், அவர் தலைமறைவாக இருப்பதையும் போலீஸார் தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவரை தேடி கண்டு பிடித்த போலீஸார் பின்னர் கைது செய்தனர்.

  

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close