[X] Close
 

பந்து தாக்கியதில் மைதானத்தில் சுருண்டு விழுந்து கால்பந்தாட்ட வீரர் மரணம்


croatian-footballer-bruno-boban-died-of-heart-attack-after-struck-by-ball-report

  • இந்து குணசேகர்
  • Posted: 27 Mar, 2018 16:48 pm
  • அ+ அ-

குரேஷியாவில் கிளப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கால்பந்தாட்ட வீரர் ப்ருனோ போபன் பந்து நெஞ்சில் தாக்கியதில் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்தார். 

25 வயதான ப்ருனோ போபன் மர்சோனிஜா அணிக்காக விளையாடும்போது வேகமாகப் பந்து நெஞ்சில் பாய்ந்தது. இதில் 15 நிமிடங்களுக்குப் பின்பு தடுமாறி வலி தாங்க முடியாமல் ப்ருனோ மயங்கி விழுகிறார். 

மயங்கி விழுந்த ப்ரூனோவைக் கண்ட, சக வீரர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். எனினும் முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து ஆம்புலன்ஸை அழைக்க மருத்துவர்கள் ப்ருனோ இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

ப்ருனோ பந்து தாக்கியத்தில் மாராடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ப்ருனோ 2014 ஆம் முதல் 2016 ஆம் ஆண்டுவரை சால்வோனிஜா அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் மர்சோனிஜா அணியில் இணைந்திருக்கிறார். மர்சோனிஜா அணியின் ஸ்டார் ஸ்கோரராக ப்ருனோ விளங்கிய ப்ருனோவின் இறுதிச் சடங்கு  திங்கட்கிழமை நடைபெற்றது. 


குரேஷியா கால்பந்தாட்ட வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close