[X] Close
 

ஐபிஎல் தொடக்க விழாவில் நடனம் ஆடும் ரன்வீர்: 15 நிமிடத்துக்கு ரூ.5 கோடி?


ranveer-singh-to-get-paid-rs-5-crore-for-a-15-minute-performance

கோப்புப் படம்

  • இந்து குணசேகர்
  • Posted: 27 Mar, 2018 15:32 pm
  • அ+ அ-

ஐபில்  2018 ஆம் ஆண்டு, 11 - வது சீசன் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனம் ஆட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஐபிஎல் 11 -வது  சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடக்க விழாவுடன்  கோலாகலமாக  துவங்கவுள்ளது. 

இந்த ஆண்டு  ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இந்த நிலையில் ஐபிஎல் தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடந்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டமிட்டுள்ளது. 

அதன்படி தற்போது பாலிவுட்டில் தொடர் வெற்றிகளை அளித்து வரும் ரன்வீர் சிங் தொடக்க விழாவில் நடனம் ஆட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுமார் 15 நிமிடம் நிகழ்ச்சிக்கு ரன் வீர் சிங் ரூ.5 கோடி சம்பளமாகக் கேட்டதாகவும் அதற்கு ஐபிஎல் நிர்வாகம் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close