[X] Close

ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேக 1,000 ரன்கள்: ‘கிங்’ கோலிக்கு இன்னொரு மகுடம்


virat-kohli-creates-record-in-australia

கோலி. | கெட்டி இமேஜஸ்.

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 18:42 pm
  • அ+ அ-

சாதனைகளை உடைப்பதில் மன்னனாகத் திகழும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேகமாக 1,000 ரன்கள் மைல்கல்லை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

அடிலெய்ட் டெஸ்ட் 2வது இன்னிங்சில் 34 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு இந்தச் சாதனையை எட்ட 5 ரன்கள்தான் தேவைப்பட்டது.  100 பந்துகளுக்கும் மேல் சந்தித்து 34 ரன்கள் என்று நல்ல அடித்தளம் அமைத்தவர் நேதன் லயனுக்கு எதிராக நிறைய ஷாட்கள் கைவசம் இல்லாததால் ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனார். ஸ்வீப் ஷாட்டை கோலி அதிகம் பயன்படுத்த மாட்டார், ஏன் பயன்படுத்தவே மாட்டார். இதில் கவாஸ்கர் போன்று இருக்கிறார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் எந்தவிதமான ஸ்பின்னருக்கு எதிராகவும் பலவிதமான ஷாட்களை கைவசம் வைத்திருப்பார், அதுவும் நேதன் லயன் போன்ற பவுலர்கள் சச்சினுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது, வேகப்பந்து முடிந்த பிறகு ரன் எடுக்கும் வாய்ப்பாக நேதன் லயனை அவர் பார்ப்பார். இறங்கி வந்து மிட் ஆனில் அடிப்பது, இன்சைட் அவுட் ஷாட், ஸ்லாக் ஸ்வீப், ஸ்வீப், விக்கெட் கீப்பருக்கு பின்னால் பெடல் ஸ்வீப், என்று பல ரேஞ்ச்களை வைத்திருப்பவர் சச்சின், ஆனால் கோலியிடம் அந்த ரேஞ்ச் இல்லை.

வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் விராட் கோலி, ஸ்விங்கிங் பிட்ச்களில் மாற்று ஷாட்கள் இல்லாதவர், கிரேட் பிளேயர்கள், அதாவது சச்சின், லாரா, காலிஸ், ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹெய்டன் போன்றவர்கள் ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி வெளியே எடுக்கும் பந்துகளை, அதுவும் ம் சற்றே ஷார்ட்டாக வரும் பந்துகளை மிட்விக்கெட்டில் புல்ஷாட் ஆடுவார்கள், இதனால் 3 ஸ்லிப்கள் பயனற்று போகும். கிளென் மெக்ரா, ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், வால்ஷ், பிஷப் ஆகியோருக்கு எதிராக சச்சின் இப்படிப்பட்ட ஷாட்களை ஆடி ஸ்லிப்பை அங்கிருந்து அகற்ற வைப்பார். ஆனால் விராட் கோலி ஆஃப் ஸ்டம்ப் பந்துகளுக்கு வெறும் கவர் ட்ரைவ் மட்டும்தான் வைத்துள்ளார், அதனால்தான் அயல்நாட்டில் ஹெவியாக ரன்கள் ஸ்கோர் செய்தாலும், அவரை வீழ்த்தும் வாய்ப்பை அவர் தொடக்கத்தில் வழங்கி விடுகிறார், இதிலிருந்து தப்பினால்தான் சதம், இரட்டைச் சதம் எல்லாம், இப்போதைக்கு தப்பி விடுகிறார், ஸ்கோர் செய்கிறார்.. அதுவும் பிலாண்டர் போன்ற பவுலர்களிடையே செல்லுபடியாவதில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் விரைவாக அவர் 1000 ரன்களை எடுத்தது உண்மையில் அவருக்கு பெரிய சாதனையே. இதன் மூலம் அவர் சச்சின் (1809), விவிஎஸ். லஷ்மண் (1236), ராகுல் திராவிட் (1143),  ஆகியோர் பட்டியலில் இணைந்துள்ளார். 18 இன்னிங்ஸ்களில் இவர் 1,000 ரன்களை எடுத்து அதிவிரைவில் ஆஸி.மண்ணில் 1000 ரன் மைல்கல்லை எட்டியவரானார் விராட்.  இவருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இதே சாதனையை 4 இங்கிலாந்து வீரர்கள் கோலியை விடவும் விரைவாக 1000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளனர், ஆகவே இந்திய வீரர்களில் கோலி அதிவிரைவு 1000 ரன்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close