[X] Close

ஆஸி.யை விட்டு விடாதீர்கள்... 1-0 முன்னிலைக்கு நல்ல வாய்ப்பு: இந்திய அணிக்கு சச்சின் உத்வேகம்


sachin-tweet-about-indian-batting

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 17:07 pm
  • அ+ அ-

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இன்னும் 7 விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில் முதல் இன்னிங்ஸ் சதநாயகன் புஜார 40 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வினை வைத்துக் கொண்டு ஸ்கோரை இன்னமும் வலுப்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு வலுவான இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு உற்சாகமூட்டும் விதமாக மாஸ்டர் பேட்ஸ்மேன்  சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டரில் பதிவிட்டதாவது:

இப்போதைய நிலவரப்படி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  ஆஸ்திரேலியாவிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்ல எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. நாளை (4ம் நாள்) ஆஸ்திரேலியா முதல் 2 மணி நேர ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினால்தான் ஆட்டத்தில் நிற்க முடியும். இல்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா 0-1 என்று தோல்வியுடன் தான் செல்ல முடியும்.

இவ்வாறு சச்சின் இட்ட ட்வீட்ட்டை ஆயிரக்கணக்கானோர் மறு ட்வீட் செய்ய, 8,000த்துக்கும் மேலான லைக்குகள் அள்ளியுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close