[X] Close

‘இப்படி ஆடுங்கள்’ : கிங் கோலியைச் சீண்டிப்பார்த்த லயன்? கடைசியில் வீழ்த்தியும் விட்டார்


kohli-and-lion-news

படம். | ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 14:55 pm
  • அ+ அ-

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓரளவுக்கு ஓங்கியிருப்பதால் ஆஸ்திரேலிய அணியினர் வெறுப்படைந்தது 3ம் நாள் ஆட்டமான இன்று தெரிந்தது.

250 ரன்களுக்கும் மேல் 1 ரன்னையாவது எடுத்து விட வேண்டும், 1 ரன்னாவது முன்னிலை பெற்று ‘நாங்கள் எங்கள் மண்ணில் உங்களை விட சிறந்தவர்கள்’ என்று இந்திய அணிக்கு உளவியல் ரீதியாக நிரூபிக்க ஆஸ்திரேலிய பேட்டிங் ஆசைப்பட்டது, ஆனால் இன்று 235 ரன்களுக்கு மடிந்து 15 ரன்கள் பின் தங்கியது, இதனையடுத்து உளவியல் ரீதியாக இந்திய அணிக்கு இது ஒரு சிறு வெற்றிதான்.

மேலும் 2வது இன்னிங்சில் முரளி விஜய்யும், ராகுல் முதல் இன்னிங்சில் வைத்த பொறியில் சிக்கவில்லை. இருவரும் இணைந்து 63 ரன்கள் என்ற மிக முக்கியமான தொடக்கக் கூட்டணி அமைத்தனர். கே.எல்.ராகுல் கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடினார் நேதன் லயனை தைரியமாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார், பாட் கமின்ஸ் ஒரு பந்தை ஃபுல் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீச அதனை ராகுல் காலைப்போட்டு பாயிண்ட்டில் பந்தை தூக்கி சிக்சருக்கு அடித்தார். பந்து பாயிண்ட்டில் ஒரு 10-15 வரிசை தாண்டி போய் விழுந்தது மிகப்பெரிய சிக்ஸ். இப்படியாக அவரும் ஆக்ரோஷம் காட்டினர்.

விஜய்யும், ராகுலும் தேவையில்லாத ஷாட் தேர்வில் அவுட் ஆக கோலி, புஜாராவிடம் ஆட்டம் வந்தது.  கோலி மிகப்பொறுமையாக ஆடினார், 104 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து உறுதியாக ஆடினார். இந்த இன்னிங்சின் போது நேதன் லயன் சிலபல செய்கைகள், சிரிப்புகள், வார்த்தைகள் என்று கொஞ்சம் இந்திய அணியைச் சீண்டிப்பார்த்தார்.

கோலி, புஜாரா கூட்டணி அபாயகரமாக சென்று கொண்டிருப்பதாக ஆஸி. அணியினர் உணர்ந்த போது அவர்கள் உடல் மொழியில் வெறுப்பு தெரிந்தது, அப்போதுதான் விராட் கோலி போட்டிக்கு முன்பே கூறியது போல் விக்கெட் விழாமல் வெறுப்பு வரும்போது எந்த அணியுமே, ஆஸ்திரேலியா என்றில்லை கொஞ்சம் கேலி செய்வார்கள் இதில் ஒன்றும் தீங்கில்லை என்றார். ஆனால் அந்த வார்த்தைகளுக்கு  அவரே இன்று வீழ்ந்தார்

ஒரு கட்டத்தில் நேதன் லயன் பந்துகளை விராட் கோலி நிதானமாக ஆடத்தொடங்கியதையடுத்து அவரை சீண்டும் விதமாக  ‘ஃபார்வர்ட் டிஃபன்ஸ்’ எப்படி ஆடுவது என்பது போல் கோலிக்குச் செய்து காட்டியது போல் தெரிந்தது. கோலி கண்டுகொண்டது போலும் தெரியவில்லை. இதனை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தன் ட்விட்டர்  பக்கத்தில் படத்துடன் வெளியிட்டு கேள்விக்குறியுடன் தலைப்பிட்டுள்ளது.

கடைசியில் நேதன் லயன் பந்து ஒன்று ஸ்பாட்டில் பிட்ச் ஆகித் திரும்ப மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஷார்ட் லெக்கில் ஏரோன் பிஞ்ச் கையில் கேட்ச் ஆனது. கோலியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது, இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒருவாறாக கோலியை எழும்ப விடாமல் ஆஸி. அணியினர் அமுக்கி விட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close