[X] Close

82 ஆண்டுகால பவுலிங் சாதனை முறியடிப்பு: பாக். லெக்ஸ்பின்னர் யாசிர் ஷாவின் புதிய உலக சாதனை


yashir-khan-creates-world-record

அதிவேக 200 விக்.: 82 ஆண்டுகால சாதனை முறியடிப்பு, யாசிர் ஷா. | ஏ.எப்.பி.

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 17:09 pm
  • அ+ அ-

யாசிர் ஷாதான் நடப்பு கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னரா? என்று ஆச்சரியப்பட வைக்கும் ஒரு சாதனையை பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா நிகழ்த்தியுள்ளார். அபுதாபியில் நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தினார் யாசிர் ஷா.

அதாவது நியூஸிலாந்து பேட்ஸ்மென் வில்லியம் சோமர்வில்லை வீழ்த்திய யாசிர் ஷா தன் 33வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிகக்குறைந்த டெஸ்ட்களில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகசாதனையை நிகழ்த்தியுள்ளார்.  82 ஆண்டுகளுக்கு முன்பாக கிளாரி கிரிம்மெட் என்ற ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் தனது 36வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டியிருந்தார், அதனை இப்போது முறியடித்த உலக சாதனையை தனதாக்கினார் யாசிர் ஷா.

நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய யாசிர் ஷா 2வது இன்னிங்சில் லேதம், சோமர்வில் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார்.

4ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளனர். 104 ரன்களை முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் 93 ரன்களுடனும் ஹென்றி நிகோல்ஸ் 45 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

கேன் வில்லியம்சன் முதல் இன்னிங்சிலும் 89 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close