[X] Close

திருந்த நினைக்கும் ஆஸி. அணியை திருந்த விடமாட்டாரோ கோலி? - ஸ்லெட்ஜிங்கை நியாயப்படுத்திப் பேச்சு


kohli-speech-at-australia

படம். | ஏ.எப்.பி.

  • kamadenu
  • Posted: 05 Dec, 2018 20:32 pm
  • அ+ அ-

பால்டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகே ஆஸ்திரேலிய அணி வீரர்களின் களநடத்தைகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து புதிய நடத்தை முறைகளை வீரர்கள் கடைபிடித்து இழந்த நன்மதிப்பை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற முனைப்பில் ஜஸ்டின் லாங்கரும், ஆஸி. கேப்டன் டிம் பெய்னும் முயற்சி செய்து வருகின்றனர்.

ஸ்லெட்ஜிங் கூடாது, அது தேவையில்லை என்று அவர்கள் வேறு வழியைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ள நிலையில் விராட் கோலி நாளை அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில்  ‘போட்டியில் கடினமான சூழ்நிலை ஏற்பட்டால் செய்யலாம், கொஞ்சம் கொஞ்சம் செய்யலாம்’ என்று பன்னீர்செல்வம் நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும் என்று ஆஸ்திரேலிய அணிக்கு அழைப்பு விடுப்பது போல் பேசியுள்ளார்.

டிம் பெய்ன் மாறாக, “டெஸ்ட் கிரிகெட்டை வெற்றி பெறத்தான் ஆடுகிறோம்.  ஆனால் நாட்டுக்கு மரியாதை தேடித்தரும் செயலும் வெற்றி பெறுவதற்குச் சமமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயமே” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் விராட் கோலியோ, “ஒரு அணி அது போன்ற ஒன்று நடந்த பிறகு (பால் டேம்பரிங்) முழுதும் எதிர்மறையாக இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. கடந்த காலத்தில் இரு அணிகளும் எல்லைகளை மீறியுள்ளன, அவ்வாறு இனி நடக்காது, ஆனாலும் இது போட்டிநிறைந்த ஒரு விளையாட்டு கடைசியில் இது சர்வதேச கிரிக்கெட் போட்டி,  இதில் போய் பவுலர்கள் வெறுமனே பந்து வீசிவிட்டு மீண்டும் தன் பவுலிங் மார்க் நோக்கிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

சில நேரங்களில் பேட்ஸ்மென்களுக்கு அழுத்தம் கொடுக்க நேரிடும். அதற்காக எல்லை மீறுதல் என்று அர்த்தமில்லை, அவர்கள் மண்டைக்குள் ஏதாவது ஒன்றைப் புகுத்த வேண்டும். இதனை எந்த ஒரு அணியிடமிருந்தும் எதிர்பார்க்கலாம், ஆஸ்திரேலியா அணி மட்டுமல்ல.  ஆகவே ‘அது’ இருக்கவே செய்யும், ஆனல் கடந்த காலத்தைப் போல் இரு அணிகளும் கட்டுப்பாடு இழக்கும் விதமாகப் போகாது.

போட்டி மனப்பான்மை இருக்கவே செய்யும், கடினமான சூழ்நிலையில் பேட்ஸ்மென்களை அவுட் செய்ய வேண்டும் என்ற நெருக்கடி ஏற்படும். எதிரணியில் ஒரு முக்கிய வீரர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவரை நோக்கி நாம் கடினமாகச் செல்ல வேண்டியிருக்கும். அது உடல் மொழியில் இருக்கலாம் அல்லது ஓரிரு வார்த்தைகளில் இருக்கலாம்.  ஆனால் தீவிரமாக எதுவும் நடக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் திறமை அளவில் மிகவும் உயர்ந்த தரமுள்ளது. அதனால் அப்படிப் போக வேண்டிய அவசியமிருக்காது, ஆனாலும் சில வேளைகளில் பேட்ஸ்மென் ஒருவரின் ரிதமை நம்மால் கெடுக்க முடியாமல் போகலாம், அப்போது கொஞ்சம் கிண்டல் செய்யலாம் அது ஒரு போதும் தீங்கு ஆகாது” என்று ஸ்லெட்ஜிங் செய்யலாம் என்பது போல் பேசி ஆஸ்திரேலியாவைத் தூண்டி விடுகிறார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

அதே போல் தான் சிறப்பாக ஆடுவதற்கு உத்வேகமாக மோதல் போக்கைத் தான் ஒரு போதும் நம்புவதில்லை என்றாலும் கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித் டி.ஆர்.எஸ் கேட்க ஓய்வறையை உதவியை நாடியது போல் சம்பவங்கள் நடந்தால் தான் சும்மாயிருக்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close