[X] Close

சர்ச் திருப்பணிகளுக்காக கிரிக்கெட்டைத் துறந்த ஜிம்பாப்வே வீரர் தைபூ 6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட்டில்


zimbabae-team

ததேந்தா தைபூ. | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 04 Dec, 2018 19:34 pm
  • அ+ அ-

இளம் டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்திய முன்னாள் ஜிம்பாப்வே வீரர் ததேந்தா தைபூ  சர்ச் திருப்பணிகளுக்காக கிரிக்கெட்டிலிருந்து தனது 29வது வயதில் ஓய்வு பெற்றார்.

இவர் தற்போது இலங்கை உள்நாட்டு கிரிக்கெட்டில் பதுராலியா கிரிக்கெட் கிளப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ளார். உலகின் இளம் டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையை வைத்துள்ள தைபூ 11 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் 28 டெஸ்ட் போட்டிகள் 150 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார்.

இவர் மகன் இவரது ஆட்டத்தைப் பார்த்ததேயில்லை என்பதற்காக வேண்டி மீண்டு கிரிக்கெட்டுக்குள் நுழைய முடிவெடுத்துள்ளார் தைபூ.

“என் மகன் ததேந்தா ஜூனியர் என்னிடம் நான் எப்படி ஆடுவேன் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு இப்போதுதான் இந்த கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்துள்ளது.  இப்போது கூட நான் மிகவும் உடற்தகுதியுடன் இருக்கிறேன், கிரிக்கெட்டில் உலகில் நான் மிகவும் பிட்டஸ்ட் வீரர் என்று என்னைக் கூறிக்கொள்ள தயங்க மாட்டேன். இப்போது என் மகனுக்காக நான் எப்படி ஆடுகிறேன் என்று பார்ப்பதற்காக மீண்டும் பேடு கட்டுகிறேன் பேட்டை கையில் எடுக்கிறேன்” என்று கிரிக் இன்போவில் தன்னம்பிக்கையுடன் அவர் தெரிவித்திள்ளார்.

தைபூ ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். 28 டெஸ்ட் போட்டிகளில் 1546 ரன்களை 30.31 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார், அதிகபட்ச ஸ்கோர் 153.  ஒருசதம் 12 அரைசதம் எடுத்துள்ளார். 57 கேட்ச்கள் 5 ஸ்டம்பிங்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 150 ஆட்டங்களில் 3,393 ரன்களை 29.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 2 சதங்கள் 22 அரைசதங்கள், அதிகபட்ச ஸ்கோர் 107. இதில் 114 கேட்ச்கள் 33 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். 17 டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 259 ரன்களை எடுத்துள்ளார்

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close