[X] Close

யார் அந்த 6 பேட்ஸ்மன்கள்? கடும் குழப்பத்தில் ஆஸ்திரேலியா


who-is-6-batsman

கெட்டி இமேஜஸ்.

  • kamadenu
  • Posted: 03 Dec, 2018 18:52 pm
  • அ+ அ-

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இன்னும் இருநாட்களே உள்ளன், ஆனால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இன்னும் தாங்கள் ஆடும் 6 பேட்ஸ்மென்கள் யார் என்பதை முடிவு செய்ய திணறி வருகிறது.

மேலும் அடிலெய்டில் நல்ல வெயில் அடிக்கும் என்பதால் பிட்ச் வறளும் போது இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகாமல் இருக்க வேண்டுமென்ற சிக்கலையும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர். ஏனெனில் இடது கை பேட்ஸ்மேன்கள் அங்கு அதிகம், அதனால் அஸ்வினை ஆடுவது கடினம் என்ற பிரச்சினையும் அங்கு எழுந்துள்ளது.

ஆனால் அஸ்வின் அங்கு 55 ரன்கள் சராசரியில் 21 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார். ஆனாலும் அவரை ஒதுக்கி விட முடியாது என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கருதுகிறது.

அடிலெய்ட் பிட்ச் முன்பெல்லாம் பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக இருக்கும், ஆனால் அங்கும் பிட்ச் வெளியில் செய்யப்பட்டு பதிக்கப்பட்டு வருவதால் முதல் 2 நாட்களுக்கு வேகப்பந்து வீச்சுக்கு உதவி வருகிறது. ஆனால் ஷெபீல்ட் ஷீல்ட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய வளரும் லெக் ஸ்பின்னர் லாய்ட் போப் சமீபத்தில் முதல் நாளிலேயே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் ஆஸி. அணி பேட்டின் வரிசைத் தேர்வில் பிரச்சினைகளைக் கிளப்பியுள்ளது.

டாப் 6-ல் மார்கஸ் ஹாரிஸா அல்லது ஹேண்ட்ஸ் கம்பா, யார் ஆடுவார்கள் என்ற பிரச்சினையில் இருவருமே கடந்த வாரம் அடிலெய்டில் கடினமான சூழலில் நன்றாக ஆடியுள்ளனர். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், டிராவிஸ் ஹெட் நிச்சயம் ஆடுவார் என்றார், ஆனால் அவர் கடந்த வார உள்நாட்டு போட்டியில் அரைசதம் கூட அடிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவிக்கிறது.

உஸ்மான் கவாஜா, ஏரோன் பிஞ்ச் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட்டில் சுமாரான சக்சஸ்.  ஆனால் கவாஜாவை 3ம் நிலையில் இறக்கினால் அவர் பிரமாதமாக ஆடுவார் என்ற பார்வையும் ஆஸி. நிர்வாகத்தில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் கூறும்போது, “நம்பர் 3-ல் சிறந்த வீரரை இறக்க வேண்டும் இந்த அணியில் கவாஜாதான் அது. மார்கஸ் ஹாரிஸ் நிச்சயம் வாய்ப்பளிக்கப்பட வேண்டிய வீரர்” என்றார்

ட்ராவிஸ் ஹெட் சரியாக ஆடவில்லை என்ற போதிலும் தேர்வுக்குழுவினர் பயிற்சியாளர் அவர் மீது அதீத நம்பிக்கை வைப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஹெட் ஆடவில்லை எனில் விக்டோரியாவின் ஹேண்ட்ஸ்கம்ப் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்பு அதிகமுள்ளது.  ஷான் மார்ஷ் டவுன் ஆர்டர் என்னவென்பதிலும் இன்னும் நிச்சயமான முடிவு ஏற்படவில்லை.

ட்ராவிஸ் ஹெட்டுக்கு வலைப் பயிற்சியில் ஹேசில்வுட், ஸ்டார்க், கமின்ஸ் சரியான சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு இது போன்ற தேர்வுப்பிரச்சினையெல்லாம் எழுந்தது இல்லை, சமீபகால சச்சரவுகள், ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் தடைகள் ஸ்லெட்ஜிங், நடத்தை பற்றிய புதிய கட்டளைகள் ஆஸ்திரேலிய அணியினரை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பது என்னவோ உண்மை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close