[X] Close
 

தோனி ஒரு ‘ஸ்பெஷல் கிரிக்கெட்டர்'; தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட வேண்டாம்: பத்ரிநாத்


dhoni-dinesh-karthik

தோனி, தினேஷ் கார்த்திக்.

  • kamadenu
  • Posted: 24 Mar, 2018 18:21 pm
  • அ+ அ-

 

முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் வங்கதேசக் கனவுகளை முறியடித்து தோல்வியின் பிடியிலிருந்து மீட்டு 8 பந்துகளில் 29 ரன்கள் விளாசி வெற்றி தேடித்தந்த தினேஷ் கார்த்திக் இன்னிங்ஸ் பற்றி கேட்டதற்கு பத்ரிநாத் பதிலளித்தார். 

மேலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் அஸ்வின் வரும் ஐபிஎல் தொடர் மூலம் தன்னை நிரூபித்து மீண்டும் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் தன் இடத்தைப் பிடிக்கலாம் என்று சுப்பிரமணியம் பத்ரிநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.7.60 கோடிக்கு அஸ்வினை ஏலம் எடுத்து அவரிடம் மிகப்பெரிய பொறுப்பான கேப்டன்சியை வழங்கியுள்ளது, அணியின் ஆலோசகர் சேவாக், அஸ்வின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளார், ஒரு பவுலர்தான் அணிக்குக் கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் சேவாக் தன் நிலைப்பாட்டை அஸ்வினுக்கு ஆதரவாகத் தெரிவித்துள்ளார்.

111 ஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிக்கன விகிதம் 6.55. இவர் தலைமையில் அதிரடி மன்னர்களான ஏரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், கிறிஸ் கெய்ல், ராகுல், யுவராஜ் சிங் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் பத்ரிநாத் கூறியதாவது:

நான் அஸ்வினுடன் நிறைய போட்டிகளில் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். அவரை ஒரு நண்பராக எனக்கு நன்றாகத் தெரியும். நிச்சயம் சிறப்பாக இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏதேனும் சாதிக்க விரும்புவார். 

கேப்டன்சி அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஐபிஎல் சாம்பியனாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படிப்பட்ட ஒரு அசாதாரண ஐபிஎல் தொடர் மூலம் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் அவர் பெயர் மீண்டும் மையத்துக்கு வரும். 

தன் கிரிக்கெட்டையும் தாண்டி பார்க்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் அஸ்வின் கிரிக்கெட் வாழ்வு உள்ளது. அவரை நன்றாகத் தெரிவதால் கூறுகிறேன், இந்தச் சவாலை அவர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். சுலபமல்ல ஆனால் அவர் சவாலுக்கு தயாராகவே உள்ளார். 

கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை சிறந்த அணிகள். தொடரில் என்ன ஆகும் என்பது தொடர் ஆரம்பித்தவுடன் தான் கூற முடியும். 

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து ஆடுவது எளிதானதல்ல, ஆனால் சென்னை அணியில் கடந்த கால வீரர்களும் உள்ளனர். இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் அது புதிய அணியல்ல. ஜடேஜா, பிராவோ, ரெய்னா, ஆகியோருடன் அணி பழைய ஓர்மையை ஏற்படுத்தும். 

தோனி ஒரு லெஜண்ட்.. தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட வேண்டாம்

தோனி தன்னளவிலேயே ஒரு பிராண்ட். அவர் சிறந்த விக்கெட் கீப்பர், தோனியையும் தினேஷ் கார்த்திக்கையும் எப்போதும் ஒப்பிடக் கூடாது என்றே நான் கருதுகிறேன். அது நியாயமாகாது. எம்.எஸ். ஒரு ஸ்பெஷல் கிரிக்கெட்டர், அவர் ஒரு லெஜண்ட். 

ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான அந்த இன்னிங்ஸ் தினேஷ் கார்த்திக்கிற்கு உதவும். அவர் அந்த நம்பிக்கையை சுமந்து செல்வார். கடந்த 2 ஆண்டுகளாகவே நன்றாக ஆடுகிறார். அவர் அணியை எப்படி நிர்வகிக்கிறார் என்பது பொறுத்து  ஐபிஎல் தொடர் அமையும்.

ஐபிஎல் அணியில் அவர் அணியின் நடுவரிசை அவரை நம்பியே பெரும்பாலும் உள்ளது, கார்த்திக், நிதிஷ் ரானா, ஆந்த்ரே ரஸல் இவர்கள் மூவர்தான் சுமையின் பெரும்பகுதியைச் சுமக்க வேண்டும்.

- பிடிஐ.

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close