[X] Close

'நான் உயிரோடுதான் இருக்கிறேன்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மெக்கலம்


natha-macllum-tweets

  • kamadenu
  • Posted: 01 Dec, 2018 17:17 pm
  • அ+ அ-

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன்மெக்கலம் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என்று பரவிய வதந்திகளுக்கு மெக்கலம் விளக்கம் அளித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் சகோதரர்கள் நாதன் மெக்கலம், பிரண்டன் மெக்கலம். இதில் பிரண்டன் மெக்கலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், நாதன் மெக்கலமும் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக் அனைத்திலும் நாதன் மெக்கலம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று அவரின் மனைவி வனேசா அறிவித்துவிட்டார் என்ற தகவலுடன் வதந்திகள் பரவின.

அந்தச் செய்தியில், “ நியூசிலாந்து அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் நாதன் மெக்கலம் உடல்நலக் குறைவால் இன்று மாலை உயிரிழந்தார். இந்தத் தகவலை அவரின் மனைவி வனேசா அறிவித்துள்ளார் என்று நியூசிலாந்து ஃபேன் ஹப் என்ற ஃபேஸ்புக் முகவரியில் இருந்து வெளியானது. மேலும் ட்விட்டரில் வெளியாகி ஏராளமாகப் பகிரப்பட்டது.

இந்த வதந்தியைக் கேட்டு சிரித்த நாதன் மெக்கலம் நான் உயிரோடுதான் இருக்கிறேன், யாரும் வதந்திகளை நம்பாதீர்கள் என ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ நான் உயிரோடுதான் இருக்கிறேன். இதற்கு முன்அடித்ததைக் காட்டிலும் அதிக வலிமையுடன் அடிப்பேன். யாரும் நம்பாதீர்கள், நான் இறந்துவிட்டேன் என்கிற செய்தி பொய்யானது. ல வ் யூ ஆல் “ எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமைப்பின் தலைமை நிர்வாகி ஹீத் மில்ஸ் கூறுகையில், “ நாதன்மெக்கலம் இறந்துவிட்டார் என்கிற செய்தி எனக்கும் கிடைத்தது. இந்தியாவில் இருந்து சிலர் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார்கள்.

அதன்பின் நான் மெக்கலத்துக்கு தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விசாரித்து உண்மையை அறிந்தேன். மெக்கலம் என்னுடைய தொலைபேசியை எடுத்துப் பேசும் வரை என் மனது துடித்துக்கொண்டே இருந்தது. மெக்கலம் என்னிடம் நலமாக இருக்கிறேன், ஆக்லாந்தில் விளையாடி வருகிறேன் என்று கூறிய பின்புதான் நிம்மதி அடைந்தேன்” எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close